பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா 35. அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம் பொருள் விளக்கம்: அழுக்காறு = அழுக்காகிய ஆறு அவா = ஆசைப் பெருக்கம் வெகுளி = வெகுண்டெழும் வீராவேசம் இன்னாச்சொல் = இனிமையற்ற கொடுமையான சொல் நான்கும் (உடலும் மனமும் ஏற்படுத்துகிற) இந்த நான்கையும் இழுக்கா (தவிர்த்து) என்றும் மறக்காமல் இயன்றது - ஒழுக்கத்துடன் தொடர்கிற செயல்களே அறம் - நல்வினை என்று அழைக்கப்படுகிறது சொல் விளக்கம்: அழுக்கு கவலை; அவா = ஆசைப் பெருக்கம் இழுக்காமை - மறவாமை முற்கால உரை: பிறராக்கம் பொறாமையும், புலன்கண் மேற் செல்கின்ற அவாவும், அது ஏதுவாகப் பிறப்பால் வரும் வெகுளியும், அதுபற்றிவரும் கடுஞ்சொல்லுமாகிய இந்நான்கினையும் கடிந்து, இடையறாது நடப்பது அறமாவது. தற்கால உரை: பொறாமை, ஆசை, சீற்றம், கடும் சொல் என்னும் தீய தன்மைகள் நான்கையும் விட்டு நீங்கி நடப்பதே அறமாகும். புதிய உரை: அழுக்காகிய -9է,Ո/, ஆசையாகிய பெருக்கம், வெகுண்டெழுதல், இனிமையற்றசொல் இந்நான்கையும் தவிர்த்து ஒழுக்கத்துடனே செய்கின்ற செய்கையே நல்வினையாகும். விளக்கம்: மனத்தின் மாசு என்ன? என்னும் முன் குறளுக்கு, விளக்கமாக இந்தக் குறள் அமைந்திருக்கிறது. மனத்திலே குறையாகத் தோன்றி கறையாக வளர்ந்து, களங்கமாகத் தென்பட்டு, ஆறு போல ஒடுகிற அழுக்கைத்தான் அழுக்காறு என்றார். அழுக்குபட்ட மனம் அவாவுகிற பேய்த்தனம் ஆகிறது. அவாவியது கிடைக்காதபோது வெகுண்டு வீறுகொள்கிறது.