பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/68

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திருக்குறள் புதிய உரை 65 வீறுகொண்ட மனத்திலிருந்து விழுகின்ற சொற்களும் இனிமை இழந்து, இன்னாதவையாக மாறுகின்றன. இன்னாதவையாக மாறுகின்றன என்று மனத்துக்கண் மாசு என்ற வார்த்தைக்குரிய விளக்கமாக விரித்திருக் கிறார் வள்ளுவர். மனத்தில் ஏற்படும் அழுக்கும், அவாவும்தன்மையும் மன்த்தின் குணம். வெகுளியும் இன்னாச்சொல்லும் உடம்பின் குணம் என்று தெள்ளத் தெளிவாக வள்ளுவர் காட்டியிருக்கிறார். 36. அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது பொன்றுங்கால் பொன்றாத் துணை பொருள் விளக்கம்: அன்று அறிவாம் - (தேவைப்படுகிற) அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்பதே என்னாது = நிதம் நடத்துகிற உடல்காக்கும் நற் செயல்களை அறிவில்லாமல் பொருட்படுத்தாமல் இருப்பதைத் தவிர்த்து. அறம் செய்க நலம் வளர்க்கும் செயல்களைச் செய்க மற்றது - அப்படித் தொடர்ந்து செய்கிறபோது பொன்றுங்கால் = உடல்நலம் (மனம்) குறைகிறபோது பொன்ற = அழியா; துணை = உதவி செய்து காக்கும் சொல் விளக்கம்: பொன்றல் = குறைதல், அழிதல், சாதல் பொன்றாத குறையாத, அழியாத, சாகாத என்னாது = அஞ்ச வேண்டியதற்கு அஞ்சாது ஆலோசனையில்லாது எதையும் பொருட்படுத்தாமை. முற்கால உரை: யாம் இப்பொழுது இளையமாகலின் இறக் குஞான்று செய்துமெனக் கருதாது அறத்தினை நாடொறுஞ் செய்க. அவ்வாறு செய்த அறம் இவ்வுடம்பினின்று உயிர்போங் காலத்து அதற்கு அழிவில்லாத துணையாகும். - தற்கால உரை: பின்னே செய்யலாம் என்று காலம் க ழிக்காமல், உட னே அறம へ 4. # . * - / # # H - . . . /TY ■-, ո : , : செய்தல் வேண்டும். ஏனெனில், அவ்வறமே இறக்கும் பொதிதி' துறவாத் துணையாக நிற்கும்.