பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/69

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ᏮᏮ டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா புதிய உரை: அப்போது பார்த்துக் கொள்ளலாம் என அறிவில்லாமல் இருப்பதைத் தவிர்த்து நலம் வளர் செயல்களை நாளும் செய்க! அப்படிச் செய்தால், உடல் நலம் குறையும் போதும் உதவும். உடலில் சத்தும், உள்ளத்தில் வித்தும், உடல் மனத்தில் சொத்துமாக வளர்க்கும் நலப் பணிகளை, அறச் செயல்களை இன்றே செய்க. நாளை என்பதைத் தவிர்க்க. மதியின்றி ஒழுகற்க. அத்தகைய நினைவுடன் நிதமும் அறநலச் செயல்களை, ஆற்றுகிறபோது, உடல் எழுச்சியுடன் மனம் புத்துணர்ச்சியுடன் வாழும். சத்து குறைகிறபோதும் அவை முத்தாய்ப்பாக உதவும். சத்து அழிவதைத்தான் செத்து அழிவது என்கின்றனர். இந்தக் குறளில், மன மாசுகளை உடல் ஆசுகளை அண்டவிடாமல் முயற்சிக்கிற அறனுக்கு, உடல் இளைத்து வளம் குறையும் நேரத்திலும், நிறைவாக இருந்து வாழ்விக்கும் என்னும் உண்மையை உணர்த்துகிறார். இன்றே செய்க. நன்றே செய்க. உடல் நலப் பணி காக்கும் உணர்வான ஒன்றே செய்க. இது வள்ளுவர் காட்டும் (Positive Thinking) முனைப்பு முயற்சி முறை வாழ்வியலாகும். 37. அறத்தாறு இதுஎன வேண்டா சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை பொருள் விளக்கம்: சிவிகை = இந்த வையத்தை பொறுத்தானொடு = பொறுமை பூண்டு ஊர்ந்தான் = நடத்தமேற்படுகிற (தலைவனுக்கு அல்லது அரசனுக்கு) வேண்டா இடை = வேண்டாத இடையீடுகளும் துன்பங்களும் ஏற்படுவது போலவே அறத்தாறு இது என் = அறத்தின் வழியும் இப்படித்தான் அமையும் சொல் விளக்கம்: சிவிகை - பல்லக்கு என்பதற்குப் பதிலாக வையம் என்றும், பொறுத்தான் என்பதற்கு பொறுமையுடையவன் என்றும், ஊர்ந்தான் என்பதற்கு நடத்துகிறவன் என்றும், இடை என்றால் துன்பம் என்றும் புதிய பொருள் கூறியிருக்கிறோம்.