பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/71

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


68 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா 38. வீழ்நாள் படாமை நன்றாற்றின் அஃதொருவன் வாழ்நாள் வழிஅடைக்கும் கல் பொருள் விளக்கம் நன்றாற்றின் = நலச் செயல்களான அறம் ஆற்றினால் வீழ் = விழுதுபோல: நாள் = இளமையானது படாம் = போர்வை போல; மெய் = உடலில் பூத்திருக்கும் அஃதொருவன் - அவ்வாறு தினம் அறமாற்றுகிற அறனின் வாழ்நாள் = வாழ்வின் ஆயுளானது; வாழ்வை வழி அடைக்கும் - (வாழ்கிற காலத்தைப்) பாதுகாக்கும் கல் = கல்வியாகவும் விளங்கும் சொல் விளக்கம்: வீழ்நாள் என்பது = விழுது; நாள் என்பது இளமை, புதுமை, ஆயுள். படாம் + மெய் = என்பது படாமை ஆயிற்று. அதாவது மெய்யின் போர்வை ஆயிற்று. வாழ்நாள்-என்பது வாழ்வின் ஆயுள் காலம் என்று கொள்ளலாம். அடைக்கும் - என்பது காக்கும் என்றும்; கல் என்பது கல்வி என்றும் பயிலுகிற பயிற்சி என்றும் அர்த்தம். நல்லதைப் = பெறுகிற உடலில் இளமையும், புதுமையும் ஆயுள் பெருக்கமும் நிறைந்து வரும் என்று இந்தக் குறளில் வள்ளுவர் கூறுகிறார். நாள் - ஆயுள், புதுமை, இளமை; படாம் = திரைச்சீலை அடை = காட்டிச் செய்; பண்பு கல் = கல்வி, பயிலுதல். முற்கால உரை: செய்யாது கழியும் நாள் உளவாகாமல், ஒருவன் அறத்தைச் செய்யுமாயின் அச்செயல் அவன் யாக்கையோடு கூடும் நாள் வரும் வழியை வாராமல் அடைக்கும் கல்லாம். தற்கால உரை: வீணாகக் கழியும் நாள் ஆகாமல், ஒருவன் நல்ல அறச்செயல்களைச் செய்தால் அது அவன் வாழ்நாளில் வரும் (பயனற்ற) வழிகளை அடைக்கும் தடைக்கல் ஆகும். புதிய உரை: நலச் செயல்களாற்றினால், விழுதுபோல இளமை வேரூன்றிப் போர்வைபோல போர்த்திருக்கும். அவ்வாறு அறம் ஆற்றும் அறனின் ஆயுள் தன்னைப் பாதுகாக்கும் கல்வியாக அது விளங்கும்.