பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை 69 விளக்கம்: நல்லனவற்றைச் செய்து வருகிறபொழுது, மெய்யில் இளமை, புதுமையான போர்வையாகப் பூத்திருப்பதுடன், அந்த அறனின் வாழ்வாயுளும் அதன் வழியும் திடத்தால் காக்கப்பெறும். அதுவே வாழ்வியல் கல்வியாகவும் விளங்கும். 39. அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம் புறத்த புகழும் இல பொருள் விளக்கம்: அறத்தான் = காக்கும் நற் செயல்களினால் வருவதே = பெறப்படுவது தான் இன்பம் = சுகமாகிய அகமகிழ்ச்சியும் நுகர்வுணர்ச்சியுமாகும். மற்றெல்லாம் - (உடல் கெடுக்கும்) மற்ற செயல்கள் எல்லாம் புறத்த புகழும் இல (புறம்பானவை) தருகிற வெற்றி, துதி மேம்பாடுகள் எல்லாம் பயனில்லாதவையாகும். சொல் விளக்கம்: இன்பம் - அகமகிழ்ச்சி, சுகம் (உணர்வு) புறத்த - புறம்பான புகழ் = துதி, வாகை, மேம்பாடு முற்கால உரை: இல்லறத் தோடு பொருந்தி வருவதே இன்பமுடையது. அதனோடு பொருந்தாது வருவன வெல்லாம், இன்பமாயினும் துன்பத் தினிடத்த. அதுவுமே யன்றிப் புகழும் உடையவல்ல. தற்கால உரை: அறவழியால் வரும் இன்பமே இன்பம். மற்ற வழியால் வருவன துன்பம். மேலும் புகழும் இல்லாதனவுமாம். புதிய உரை: நற்செயல்களால் பெறப்படுவதே சுகம். மற்ற செயல்கள் எல்லாம் பயனற்றவை. விளக்கம்: சுகம் என்பது அகத்திற்கும் புறத்திற்கும் பொருந்தும். நலிவுற்ற உடலில் பொலிவான இன்பம் பிறப்பதில்லை. அலை மோதுகிற மனத்தில் களி பொருந்திய களிப்பும் கிடைப்பதில்லை. உடலைக்