பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

アe) டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா له " 2. இல்லறவியல் திருக்குறளுக்கு முகவுரையாக அமைந்தது பாயிரவியல். எனப்பட்டது. நாம் இங்கே வாழ்தியல் எனக் கூறியுள்ளோம். அந்த நான்கு அதிகாரங்களில், தனது குறள் பாக்களில் தொகுத்துக் கூற வருகிற கொள்கைகளுக்கு, முன் விளக்கமாக, வழிகாட்டுதல்களாக, 40 குறள்களை வள்ளுவர் கொடுத்துள்ளார். முதல் அதிகாரத்தில் உலகுக்கு ஒளியாக உயிர் தந்த பகவன். மக்களுக்கு ஒளியாக வழியாக வாழ்வளிக்கின்ற மோன குரு பற்றி கூறப்பட்டிருந்தது. இரண்டாம் அதிகாரத்தில். மக்களின் அகமும் புறமும் செழிக்க, உயிர்களின் பிறப்புக்கு உயிர் நாடியாக உதவுகின்ற மாமழை பற்றிக் குறிக்கப்பட்டிருந்தது. மூன்றாம் அதிகாரத்தில், உலக இச்சைகளைத் துறந்து நீற்றாராகவும் நீத்தாராகவும் தனித்து வாழ்கின்ற மாண்புமிகு துறவியர் பற்றிப் புகழப்பட்டிருந்தது. நான்காம் அதிகாரத்தில்: மக்களோடு கலந்து வாழ்கிறபோதும் அறநெறி காத்து, தனது உடல்நலம், மன வளம், பலம் குன்றாமல் கடமையாற்றுகிற அறன் பற்றியும் விளக்கப் பட்டிருந்தது. ஒரு மனிதரின் முதல் நிலை அறன். இரண்டாம் நிலை நீத்தார். மூன்றாம் நிலை மோனகுரு. இம் மூவரும், வாழ்கிற மக்கள் இனத்துக்கு வழிகாட்டி களாவர். முதலாவதாக, இல்லற மாந்தரின் இனிய வாழ்க்கை முறைகளை வாழ்க்கை நெறிகளை வகுத்துத் தொகுத்துத் தந்திருக்கிறார். முதலில் இல்லறவியல். தொடர்ந்து வருவது துறவறவியல். மூன்றாவது ஊழியல்.

இதம் தரும், வீடு என்பதே இல்லாகிறது. அது அறம், பொருள், இன்பம் என்னும் மூன்றும் நடமாடுகிற இதம். மூன்றும் இடம் தருகிற சுகம். சுகத்தின் மறுபெயர்தான் வீடு. வாகையுடன், ஒழுக்கமாகிய கையுடன் வாழ்வது வாழ்க்கை. அப்படிப்பட்ட இல் வாழ்க்கையை ஐந்தாம் அதிகாரமாக அற்புதமாக வைத்துள்ளார் வள்ளுவர்.