பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/78

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திருக்குறள் புதிய உரை 75 புதிய உரை: ஐம்பொறி அடக்கத்தால் உயர்ந்தவர்கள், ஐம்பொறி ஆட்சியால் வறுமையாளர்கள், ஐம்பொறியால் அழிந்தவர்கள் அனைவரையும் துணையாக இருந்து காக்கும் ஆற்றலாளன் இல்வாழ்வான் ஆகிறான். விளக்கம்: இந்தக் குறளில் தம்முடன் வாழ்கிற மக்களுக்கு உதவ வேண்டுமானால், அவன் தகுதி உள்ளவனாக இருந்தால் தான் இயலும் என்ற உடல்நலப் பெருமை சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது. ஐம்பொறி அடக்கத்தால் உயர்ந்தவர்கள் துறவிகள். ஐம்பொறி ஆட்சியால் அவலமானவர்கள் துவ்வார்கள். ஐம்பொறி வீழ்ச்சியால் நோயால் அழிந்தவர்கள்; நலிந்தவர்கள். இம்மூவரையும் காக்கிறபோதுதான் சமுதாய வாழ்வு சக்திதரும் வாழ்வாகும். அவர்களில் ஒரு சாரார் பட்டாலும், சமுதாய வாழ்வு சீர்கேடாகி விடுகிறது. இந்தச் சீர்கேட்டினைச் சிதைத்து, சீரான வாழ்க்கைக் குத் துணையாக வாழ்ந்து உதவி, உயர்வு பெற வேண்டும். அதுவே இல் வாழ்வானின் தகுதி,சிறப்பு என்கிறார் வள்ளுவர். துவி வாதவர்: பசி, வறுமையுற்றவர் என்ற பெ ாருள் இருந்தாலும் இங்கே ஐம்பொறியின் திண்மை யிழந்தவர் என்றும், ,- : ! — --" - 2 . . . . T * # i. # # இறந்தார் என்பது வீழ் சசி அடைந்தவர் என்றாலும் வருந்தி வாழ்கிறவர் என்றும் இங்கே பொருள் கொண்டிகுக் கிறேன். பொருள் விளக்கம்: ஐம்புலத்தார் - (குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை) ஐவகை நிலத்தில் வாழ்பவர்கள். ஆறு பயன் பெறுமாறு அறம் செய்து (இளைப்பாற்றி) ஒம்பல் - (அவர்களை) பாதுகாப்பது தலை - தன்னுடைய கடமை என்று ஆங்கு (அறனை) தன்னை அண்டியவரை: விருந்து ஒக்கல் சுற்றத்தாராகக் கருதி விருந்தளித்துக் காப்பவர் தென்புலத்து தென்னாட்டின் i. #. # 暉 * h - o - #. is , حسي தெய்வம் - வணக்கத்திற்குரிய மேன்மையானவர் ஆவார்.