பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 o டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா சொல்விளக்கம்: . ஆறு அறம், உந்தி, பயன், இளைப்பாறு; ஒம்பல் - சுற்றம் புலம் = நிலம்; விருந்து - புதுமை, சுற்றம் # முற்கால உரை: விதிரர், விருந்து, சுற்றம், ஐம் புலத்தார் தான் என்று சொல்லப்பட்ட ஐந்திடத்தும் செய்யும் அறநெறியை வழுவாமல் செய்தல் இல்வாழ்வானுக்குச் சிறப்புடைய அற்மாம். தற்கால உரை: தெளிந்த அறிவினர், வாழ்வாங்கு வாழ்பவர், விருந்தினர். சுற்றத்தினர் இவர்களைப் பேணும் தான் என்னும் ஐந்திடத்தாரையும் பேணல் இல்வாழ்வான் சிறந்த கடமையாம். புதிய உரை: குறிஞ்சி, முல்லை, மருதம், பாலை, நெய்தல் எனும் நிலத்தில் வாழ்கிற ஐம்புலத்தார், பயன் பெறுமாறு அறம் செய்து, அவர்களைப் பாதுகாப்பது தன்கடமை என்று விருந்தளித்துக் காப்பவர் தென்னாட்டின் வணக்கத்திற்குரியவர். விளக்கம்: தெரிந்தவர்க்கு உதவுவது மனிதப் பண்பு. தெரியாதவர்க்கும் தேவை கருதி உதவுவது தெய்வப் பண்பு. இங்கே ஐம்புலத்தார் என்று, சுற்று வட்டாரத்தில் உள்ள ஐவகை நில மக்களையும் காட்டி, அவர்கள் நாடி வருகிறபோது பயன்பெறுமாறும், பயன் பெற்று இளைப் பாறி மகிழவும், அதனிலும் அவர்கள் சுற்றம் போலச் சூழ இருந்து காக்கவும் கூடிய அறன், தென்புலத்திற்கே பெருமை சேர்க்கக் கூடிய மேலான மகன் ஆவதால் தெய்வம் என்றார். எதிர்பாராமல் செய்கிற உதவிக்கு ஈடு சொல்ல எதுவுமே இல்லை. முகம் தெரியாத மக்களுக்கு அகத்தில் இருத்தி, சுகத்தைக் கொடுத்துக் காக்கின்ற பண்பு கடவுள் பண்பு. அது இல் வாழ்க்கையில் உள்ளோரின் இனிய கடமை என இந்தக் குறளில் விளக்குகிறார்.