பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்மாமணி - திருக்குறள் ஞாயிறு அருண்மொழிச் செல்வர் * புதுவை இல்லம் முனைவர் பா. வளன் அரசு 1 وی . நெல்லைநாயனார் தெரு முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் பாளையங்கோட்டை-627002. துய யோவான் கல்லூரி *: O462 - 579967. பாளையங்கோட்டை627002. விளையாட்டுத் துறை அறிஞரின் வித்தக விளக்கம்! உடற்கல்வி அறிஞர் நவராஜ் செல்லையா அவர்களின் திருக்குறள் உரை விளக்கம் புதிய பார்வையுடன் வெளிவந்துள்ளது. 'விளையாட்டுக் களஞ்சியம்' இதழ் வாயிலாகத் தொடர்ந்து மாதந்தோறும் புத்துரை வழங்கி வருகிறார். முற்கால உரை என்ற பெயரில் பரிமேலழகர் உரையும்; தற்கால உரையாகத் தாம் தேர்ந்து எடுத்த உரையும் தந்து வித்தகப் புலமை நலம் விரியும் வ்ண்ணம், தம் எண்ணக் கோவையை எழுத்தாக்கி, விழுமிய திருக்குறளுக்குப் பெருமை தருவதற்கு முனைந்துள்ளார். திருவள்ளுவர் அருளிய திருக்குறளுக்கு மணக்குடவர் முதல் பரிமேலழகர் வரை பதின்மர் பதின் மூன்றாம் நூற்றாண்டில் உரை வரைந்துள்ளனர். கடந்த ஏழு நூற்றாண்டுகளில் ஏறத்தாழ எழுபதின்மர் புதிய உரைகளைத் தீட்டியுள்ளனர். முனைவர் நவராஜ் செல்லையா அவர்கள் முன்னோர் உரைகள் பற்றிக் கூறும்போது, 'அவர்கள் உரையெல்லாம் அறிவார்ந்த உரைகள்; அனுபவக் குவியல்கள்; ஆன்ற தமிழ்ச் சுரங்கங்கள்; பெரிதும் போற்றப்படும் புதையல்கள்; ஆழமான கருத்துாற்றுக்கள்' என்று போற்றி மகிழ்கிறார்; தம் உரைபற்றித் தெரிவிக்கும் பேராசிரியர், 'அவர்கள் தோண்டிய மணற்கேணியின் ஆழத்தில், இன்னும் கொஞ்சம் ஆழமாகத் தோண்ட ஆசைப் பட்டிருக்கிறேன்' என்று எடுத்துரைக்கிறார். முப்பது ஆண்டுகளில் இரு நூறு நூல்கள் எழுதிக் குவித்துள்ள உடற்கல்வி அறிஞர் நவராஜ் செல்லையா அவர்கள், "வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்' பற்றியும், "வள்ளுவர் வணங்கிய கடவுள்' குறித்தும் ஆராய்ந்து இரு நூல்களை வழங்கியுள்ளார். திருக்குறளை ஆயிரத்துக்கு மேற்பட்ட முறை படிக்கவும் ஆன்ற பொருள் அறியத் துடிக்கவும் செய்த பேராசிரியர், செல்லையா