பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/81

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


78 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா - i. 藝 ר ■ # # 轟 # * wo இன்ப அனுபவங்களிலும் ஒழுக்கத்தைக் காக்கிறபோது, வாழ்கிற வீடு சொர்க்கமாகும். கிடைக்கிற வாழ்க்கையும் சுகமாகும். பாத்தூண் என்றால் பங்கிட்டு உண்ணுதல் என்பது ஒரு பொருள். பாத்து - ஐம்புல இன்பம்; ஊண் - அனுபவம் என்பதும் ஒரு பொருள். வழி என்பதற்கு ஒழுக்கம் என்றும் கூறலாம். மூன்றாவது குறளில் தெய்வ நிலையைப் பெற முடிகிற அறனாகிய இல்வாழ்வான் பிறர்க்கு உதவுதல் மட்டும் போதாது. தன்னுடைய வாழ்க்கையையும் தகுதி உடையவனாக அமைத்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகிறார். பழிகாரன் தருகிற எதையும் பண்புள்ளவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்னும் தமிழ் நெறியின் தத்துவம் இங்கே அழகாக விளக்கப்பட்டிருக்கிறது. 45. அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது. பொருள் விளக்கம்: அன்பும் = ஆர்வத்தால் காட்டுகிற கருணையும் அறனும் = கருணையால் செய்கிற நல்வினையும் உடைத்தாயின் = அறனாகிய இல் வாழ்வான் எல்லோரிடமும் வெளிப்படுத்துகிறபோது அது - அப்படிப்பட்ட அரிய நிலையே இல்வாழ்க்கை = இல்லிலிருந்து வாழ்கிற வாழ்க்கையின் பண்பும் = பாடறிந்து ஒழுகும் செயல் நன்மைக்கு பயனும் = ஒர் அர்த்தமாகிறது. சொல் விளக்கம்: பண்பு - பாடறிந்து ஒழுகும் நற்குணத்தால் நிகழும் செயல் நன்மை பயன் = அதன் விளைவால் நிகழ்கிற வேள்வியாகிறது முற்கால உரை: மனையாளிடத்து இன்பும் பிறர்க்கு பகுத்துண்ணலாகிய அறனும் குணமும் பிரயோசனமுமாம். தற்கால உரை: ஒருவரது இல் வாழ்க்கையில் காட்டப்படும் அன்பு அதன் பண்பாகும். செய்யப்படும் அறம் அதன் பயனாகும்.