பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/85

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


82 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா விளக்கம்: மற்றவர்கள் மனங்குளிரத் துயர் துடைத்துக் காக்கும் ஒழுக்க நெறியில் தவறாது வாழ்கிற இல்வாழ்வான் வாழ்வானது, உலகை விட்டு விலகி நோற்கிற நோற்பார் பெறுகிற வலிமையைவிட, பல மடங்கு ஆற்றல் பெற்றதாகும். - இந்தக் குறளில் உடல் தகுதி பெறுதல் மட்டும் உயர்வன்று. உதவித் துயர் தீர்த்தல் உண்மையான வாழ்க்கை நெறி என்று கூறுவதால்தான் வள்ளுவம் ஒரு சிறந்த வாழ்வியல் நூலாக விளங்குகிறது. 睡 49. அறன்எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும் பிறன்பழிப்பது இல்லாயின் நன்று A. பொருள் விளக்கம்: அறன் என = நலப் பணிகளில் எல்லார்க்கும் உதவுகிற பட்டதே - அனுபவம் பெறுவதே இல்வாழ்க்கை = இல் வாழ்கிறவன் பெறும் பேறாகும் அஃதும் - அப்படிச் செய்யும் அறப்பணிகளும் பிறன் = மனம் வேறுபட்ட பகைவனும் பழிப்பது = குறைகண்டு குற்றம் சொல்லாதவாறு இல்ஆயின் = அந்த இல்லம் இருந்து விட்டால் நன்று - அதுவே சுகம் பொழிகிற சொர்க்க பூமியாகிறது. சொல் விளக்கம்: நன்று = சுகம், சொர்க்கம், நம்மை, பெருமை, வாழ்வு பட்டது - அனுபவிப்பது பிறன் = மனம் மாறுபட்டவன், பகைவன் முற்கால உரை: அறனென்று சொல்லப்பட்டது இல் வாழ்க்கையாகும். துறவறமும் பிறன் பழிக்கப்படுவது இல்லாதிருந்தால் நல்லது. தற்கால உரை: அறம் என்று சொல்லப்பட்டது இல் வாழ்வே. அவ்வாழ்வு புகழுக்கு உரியதே எனினும். பிறர் பழித்தற்கும் இடம் இல்லாது அமைந்தால், மேலும் நல்ல புகழுக்குரியதாகும்.