பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/86

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திருக்குறள் புதிய உரை 83 புதிய உரை: நலப்பணிகளில் அனுபவம் பெறுவதே இல்வாழ்வான் பேறு அப்பணிகளும் பகைவனும் குறைகாணாதவாறிருந்தால் சுவர்க்கமாகிறது. விளக்கம்: நலப்பணிகளில் எல்லார்க்கும் உதவுகிற அனுபவம் பெறுவதே இல்வாழ்வான் பேறாகும். அதிலும். பகைவர்களும் குறை காண முடியாதவாறு இல் வாழ்வு அமைந்து விட்டால், அதுவே சுகம் பொழிகிற சொர்க்க பூமியாகிறது. பகைவரும் பாராட்டும்படி பயன்தரும் அறக் காரியங்களைப் புரிய வேண்டும் என்று வற்புறுத்துகிறார் வள்ளுவர். பட்டது என்றால் அனுபவம் பெறுவது என்று பொருள் தருகிறது. அதுபோலவே பிறன் என்றால் மற்றவர் என்பதை விட, பகைவர் என்னும் பொருளே இங்கு பொருந்துகிறது. நன்று என்றால் நல்லது என்பதை விட, சுகம் சொர்க்கம் நன்மை, வாழ்வு என்றெல்லாம் நல்ல பொருள்கள் இருப்பதால் இக்குறள் அறன் செய்கிற அறம் இன்னும் ஆற்றல் மிகுந்த திறமாக அமையவேண்டும் என்பதற்கு வழிகாட்டுகிறது. 50. வையத்துன் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் தெய்வத்துள் வைக்கப் படும் பொருள் விளக்கம்: வையத்து = இந்த நில உலகத்தில்; உள் = மன எழுச்சி என்கிற வாழ்வு செல்வநிலையை, ஆங்குவாழ்பவன் - அவ்வாறு பெறுகிற அறன் ஆனவன்; வான் = மிக மோலோங்கிய பெருமையில்; உறையும் = வசிக்கின்ற தெய்வத்துள் = தெய்வத்தன்மை நிறைந்த, வைக்கப்படும். மகாமனிதராக வாழ்த்தப்படுவார் சொல் விளக்கம்: உள் = மன எழுச்சி, வாழ்வு = செல்வம்; உறைதல் = வசித்தல் தெய்வத்தன்மை (காக்கும் குணம்) படு = கெட்டிக்காரன், நிபுணன்.