பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை 85 6. வாழ்க்கைத் துணைநலம் வாகையுடன் வெற்றிகரமாக வாழ்வதற்கு உதவும் ஒழுக்கம். (வாழ் வாகை கை) உயிராகப் போற்றப்படுகிறது. ஒழுக்கத்தின் உயர்நிலையில் உயிராக உலா வருகிறவனே அறன் என்று பெருமைப்படப் பேசப்படுகிறான். அறனை, அறநெறியில் வாழ்ந்திட அறனுக்கு, இல்வாழ்வு எத்தனை சுகமான இடம் என்று சுட்டிக்காட்டி, சுடர்முகமாகப் பல குணங்களை முன்அதிகாரத்தில் பத்துப் பாடல்களில் குறித்திருந்தார் வள்ளுவர். 軸 அந்த அதிகாரத்தைத் தொடர்ந்து வருகிறது வாழ்க்கைத் துணைநலம். துணை என்றால் மனைவி என்பதுடன், கணவன் என்றும் ஒரு பொருள் இருக்கிறது. - துணை என்றால் உதவி புரிவோன் என்பதும் ஒரு பொருள். இங்கே அறனுக்கு உதவி புரிய வருகிற ஒரு பெண்ணின் நலம் என்ன என்று பாடுகிறார் வள்ளுவர். வள்ளுவர் இங்கே இதனை நலம் என்றார். நலம் என்றால் மேம்பாடு உடையவன் என்றும் ஒருபொருள் உண்டு. ஒரு துணைவியானவள், அறனின் துணையாக, அவனுக்கு உதவி புரிய வருவதற்கு முன்பாக எத்தனை எத்தனை மேம்பாடுகளையும் மேன்மையான குணங்களையும் கொண்டிருக்க வேண்டும் என்று கூறுகிறார் இங்கே. இல்லாள்: 1. எந்த உரிமையும் இல்லாதவள். 2. இல்ஆள்-சுகம் தருகிற ஒரு ஆள். 3. இல்லத்தைக் காப்பாற்ற ஒரு வேலையாள், 4. இல்லத்தை ஆள்பவள். வள்ளுவர் 4 வது நிலையான பெண்ணைத்தான் இங்கே காட்டுகிறார். இது பெண் குலத்தின் மேல் கொண்டிருந்த வள்ளுவரின் பேரன்பையும் பெருமதிப்பையும் காட்டுகின்றது. பேண்: காப்பவள் என்பதுதான் பெண் என்று ஆயிற்று ஆண்: ஆள்பவன் அதாவது செயல் மறவன் என்பது.