பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா பெண் என்பவள் காப்பாற்றுகிறவள். உழுவலன்புடன் உதவுபவள். செல்வக்குடிமகளாகவும் விளங்குபவள். இத்தனை இருந்தும் அவளது உடல் நலம் வளமில்லாமல் போனால் என்ன பயன்? யாருக்கு என்ன உதவி செய்ய முடியும்? முதல் குறளில் மனத்தால் ஒன்றி, உடலால் உதவுபவள் இல்லாள் என்றார். கண், உடம்பு, அகக்கண், புறக்கண். ஆகவே, அவள் அகத்திலும் புறத்திலும் வலிமை வாய்ந்தவளாக விளங்க வேண்டும் என்கிறார். அதுதானே துணைநலம்; இணைபலம். 53. இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென் இல்லவன் மாணாக் கடை பொருள் விளக்கம்: மாண்பு - வளமும் பெருமையும் மிக்க இல்லதென் = (உடல்மன) வலிமை இல்லாதவள் என்று இல்லவள் ஆனால் =துணை வருகிறவள் ஆகிவிட்டால் இல்லவள் = (துணையானவள்) வறுமைப் பெண்ணாக மாணா = பகைவரும் வந்து சேருகிற கடை = வாயிலாக வீட்டை மாற்றி விடுவாள் உள்ளதென் = பின் இல்லில் உள்ளது என்ன? சொல் விளக்கம்: கண் இல்லாயின் = உடல் இல்லாமல் இருந்தால்; வாழ்க்கை இல் = வாழ்க்கையில் எதுவுமே இல்லாமல் போய்விடும். முற்கால உரை: மனையாள் நற்குண நற்செய்கை உடையவளாகில் அவ்வில் வாழ்க்கை எல்லாம் உள்ளதாகும். தற்கால உரை: - நல்ல மனைவி வாய்க்கப் பெறாதவனுக்கு என்ன வசதி இருந்தும் இல்லாதவனாகவே கருதப்படுவான். புதிய உரை: வளமும் பெருமையும் மிக்க மன, உடல் வலிமை இல்லாதவள் துணையாக ஆகிவிட்டால், அவள் வறுமைப் பெண்ணாகி விடுவதுடன் பகைவரும் வந்து பாழாக்குகிற வாசலாக வீட்டையே மாற்றி விடுவாள்.