பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/93

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


90 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா விளக்கம்: இல்லறப் பணிகளை எடுத்துச் செய்ய, தொடுத்து உயர்ந்திட கற்பு மட்டும் போதாது. கற்பைக் காக்கும் மன.ஒருமையும். உடல் சக்தியை வளர்க்கும் திண்மையும் மதில்போல (கற்பு) அமையப் பெற்ற பெண்ணுக்கு அதுவே பெரும் சிறப்பு என்று வள்ளுவர். பெண்ணின் வலிமையான உடலுக்கு முக்கியத்துவமாகக் குறித்துக் காட்டுகிறார். கற்பு என்றால் ' நாயகனையே தெய்வமாகக் கொண்டு அவன் சொல் வழுவாது நடக்கும் மகளிர் நிலை" என்று தான் பொருள் கூறுகின்றார்கள். அதற்கு மதில் என்றும், தியானம் என்றும், கல்வி என்றும் பொருள்கள் உண்டு. வலிமையான உடலைக் காக்கும் கல்வியாக, தியானமாக, மதில் அரணாக, ஒருமைப்பாடு விளங்குவதால், அதுதான் பெறற்கரிய பேறுகளுள் பெறும் பேறு என்கிறார். வலிமையான உடலில், வளமான ஒழுக்கம் வாழ்வது இயல்புதானே. 55. தெய்வம் தொழாஅள் கொழுநற் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை பொருள் விளக்கம்: தெய்வம் தொழா = தன்னுடலாகிய தெய்வத்தைத் தொழுகிற அள் = கூர்மையான அறிவு நுட்பம் கொழுநன் = தனது துணைநலமான கணவனுடன் தொழு = இல்வாழ்க்கையை மேம்படுத்த எழுவாள் = முயற்சியை உண்டாக்கி எழச் செய்பவள் பெய்யென = சொரிதல் வேண்டும் என்று விரும்புகிற போதே மழை = அமுதமானது (பேரின்பமானது) பெய்யும் = மிகுதியாகப் பெய்து மகிழ்விக்கும் சொல் விளக்கம்: தொழு = இல்வாழ்க்கை = குடும்பம்; மழை = மிகுதி, குளிர்ச்சி அமுதம் (ஆவி) மகிழ்ச்சி அமுதம் = மழை பெய்தல் = செறித்தல், சொரிதல், அள் = கூர்மை, வன்மை, எழுவாள் = எழச்செய்வாள்; முயற்சி உண்டாக்குதல்.