பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/97

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


94 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா சொல் விளக்கம்: பெருஞ்சிறப்பு = பெருமை மிகுந்த புகழ் வாழும் உலகு = அவர்கள் வாழும் சமுதாய உலகு புத்தேளிர் = புதுமையானதாக மிளிரும் முற்கால உரை: தன்கணவரை வணங்கும் பெண்களைத் தேவர்கள் தொழுவார் என்பதாம். தற்கால உரை: கணவனைப் போற்றி, உரிய கடமையை முறைப்படிச் செய்தால், பெண்கள், வான்புகழ் கொண்டோர் பெயர் நிலவிடும். புகழ் உலகின் பட்டியலில் உயர்ந்த இடச்சிறப்பினைப் பெறுவர். புதிய உரை: - பெண்ணின் பெருந்தகுதியான மூன்று குணம். நல்ல உடல். நல்ல மனம், நல்ல மொழி. அவரைத் துணை நலமாகப் பெறுகிற ஆணும், பெருஞ்சிறப்புகளையும் மக்கள் மத்தியிலே சிறந்த தகுதிகளையும் பெற்று மகிழ்வர். அவர்கள் வாழ்கிற உலகில் தினமும் புதுமைப் பொலிவு நிறைந்து விளங்க, அவர்களும் புதுமையாளர்களாகவே பூரிப்புடன் வாழ்க்கை நடத்துவர். விளக்கம்: உடல், மன, ஆன்ம நிலையில் உயர்தகுதிகள் கொண்ட பெண்ணைத்துணையாக ஏற்ற அறனுக்கு வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும், புகழ், பூரிப்பு, புத்துணர்ச்சியும் பொங்கிப் பெருகி பெருமை சேர்க்கும். 59. புகழ்புரிந்த இல்இல்லோர்க்கு இல்லை இகழ்வார்முன் ஏறுபோல பீடு நடை பொருள் விளக்கம்: புகழ்புரிந்த - அருஞ்செயல் செய்து வெற்றி வாகை சூடுகிற இல் இல்லோர்க்கு = இல்லறம் அமையாத இல்வாழ்வார்க்கு இகழ்வார்முன்- அவர்களது செயல்பற்றி இகழ்ந்துரைப்பவர்முன் ஏறுபோல் = கம்பீரமாக தலை நிமிர்ந்து நடக்கும் பீடுநடை இல்லை - பெருமையும் இல்லை; வலிமையும் இல்லை சொல் விளக்கம்: புகழ் புரிந்த - அருஞ்செயல் செய்து வாகை சூடுகிற இல் இலோர்க்கு = இல்லறம் அமையாத இல்வாழ்வார்க்கு.