பக்கம்:திருக்குறள் புதைபொருள் 1.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சேர்ந்தாரைக் கொல்லி

23

தொழிலையும் விளக்குகின்ற ஆசிரியரின் திறமை எண்ணி எண்ணி வியக்கக் கூடியதாகும்.

நிலத்தை அறைந்தவன் கை வலி எடுக்கத் தப்பாதது போலச் சினத்தைச் சேர்ந்த மக்கள் கேடு அடையத் தப்புவது இல்லை என்பதை வலியுறுத்தவே, அதற்குச் 'சேர்ந்தாரைக் கொல்லி' எனப் பெயரிட்டிருப்பதாகத் தெரியவருகிறது.

சினம் பிறந்தவிடத்தை மட்டுமன்றி அது புகுந்த இடத்தையும் கொல்லும் என்ற கருத்தைச் 'சேர்ந்தாரைக் கொல்லி' என்ற சொற்றொடர் வெளிப்படையாக விளக்கிக் கொண்டிருக்கிறது,

நெருப்பு எடுத்தவனையும் அடுத்தவனையும் சுடுவது போல, சினம் கொண்டவனையும், கொடுத்தவனையும் அழிக்கும் என்ற பொருளைச் 'சேர்ந்தாரைக் கொல்லி' என்பதில் சிலேடையாக கண்டு மகிழுங்கள்.

சினம் கொண்டு வைவது சுடுவதை ஒக்குமா? என்ற ஐயப்பாடு எவருக்கேனும் ஏற்பட்டு விடலாம் என்று எண்ணியே, வள்ளுவர் அதனை 'நாவினாற் சுட்ட' என்ற சொற்களால் அடுத்து ஒரு குறள் மூலம் விளக்கியிருக்கிறார் போலும்.

சினம் ஒருவனிடத்தில் சேரும், அவனைக் கொண்டு மற்றொருவனைக் கொல்லும்; பிறகு தன்னைச் சேர்ந்தவனையும் கொலைத் தண்டனைக்கு ஆளாக்கிக் கொன்றுவிடும் என்ற நிகழ்ச்சிகளை 'சேர்ந்தாரைக் கொல்லி' என்பதில் கண்டு நடுங்க வேண்டியிருக்கிறது.

சினம் தாக்கியவனை, தாக்கப்பட்டவனை மட்டுமின்றி இவ்விருவரையும் சேர்ந்தவர்களையெல்லாம் சேர்ந்து துன்பப்படுத்தும் என்ற பொருளும் 'சேர்ந்தாரைக் கொல்லி' என்பதில் சேர்ந்தே இருக்கிறது.

நண்பர், பகைவர், இரண்டுமற்ற பிறர் ஆகியவர்களை மட்டுமின்றி, 'சினம்' இனத்தையும் சுடும் என்று இக் குறள் கூறுவது ஒரு பயங்கரமான அறிவிப்பு ஆகும்.

கோபம் கொண்டவனை விட்டு அவனது சுற்றத்தார் விலகிப் போய்விடுவர், அவன் தனித்துநின்று வருந்துவான்