பக்கம்:திருக்குறள் புதைபொருள் 1.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உடுக்கை இழந்தவன்

43

பற்று எளிதில் விடும்" என்ற பொருளே இதன் உண்மையான பொருள் எனக் கொள்ளலாம்.

குறளை மறுபடியும் படியுங்கள். இப்போது அதன் உண்மைப் பொருள் நன்கு விளங்கும்.

        பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
        பற்றுக பற்று விடற்கு



10. உடுக்கை இழந்தவன்

        உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
        இடுக்கண் களைவதாம் நட்பு

என்பது ஒரு குறள். இதன் பொருள் :

ஆடை நழுவியபோது மனிதன் தன் கைகளுக்கு விண்ணப்பம் செய்துகொள்வதில்லை. அவன் கேளாமலேயே அவனது கைகள் விரைந்து சென்று நழுவிய ஆடையைப் பிடித்து இடையிற் கட்டிவிடுகின்றன. அதுபோல, நண்பனுக்கு இடையூறு ஏற்பட்டபொழுது, அவன் கேளாமலேயே வலியச் சென்று, அவனது இடரைப் போக்கி, உதவி செய்ய வேண்டும் என்பதாம்.

பரிமேலழகரும் பிறரும் இவ்வாறே பொருள் கண்டிருக்கிறார்கள். கருத்திற் பெரும் பிழை இல்லை. எனினும் பொருளிற் பெரும் பிழை காணப்படுகிறது. "இழந்த" என்ற சொல்லிற்கு, "நழுவிய" என்று பொருள் கண்டவர் எவ்வளவு பெரியவராயினும், அவர் தவறு செய்தவரே யாவர். உண்மையில் "இழந்த" என்பதற்குப் "பறி கொடுத்த" என்பதே பொருள். இழவு, இழப்பு, இழத்தல் என்பனவும் இப்பொருளையே குறிப்பனவாம்.

"ஆடையைப் பறிகொடுத்தவனுடைய கை அவன் கேளாமலேயே விரைந்து சென்று மூடிமறைத்து மானங்காப்பது போல, நண்பனது துன்பங்களையும் அவன்