பக்கம்:திருக்குறள் புதைபொருள் 1.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

திருக்குறள் புதைபொருள்

கேட்கும் முன்னே விரைந்து சென்று போக்குவதே சிறப்பு" என்பதே இக்குறளின் உண்மையான பொருளாகும்.

பரிமேலழகரின் பொருளை வைத்துக்கொண்டால், மூலத்தில் உள்ள ‘உடுக்கை இழந்த’ என்பதை, உடுக்கை இழிந்த என்று திருத்தியாக வேண்டும். மூலத்தை அப்படியே வைத்துக் கொண்டால், பொருளை ‘நழுவிய’ என்பதற்கு மாறாகப் ‘பறிகொடுத்த’ என்று திருத்தியாக வேண்டும்.

‘இழந்த’ என்று மூலத்தில் இருக்கும்பொழுது அதற்கு ‘நழுவிய’ என்று பொருள் காண்பதும், ‘இழந்த’ என்ற சொல்லிற்கும் ‘இழிந்த’ என்ற சொல்லிற்கும் உள்ள வேற்றுமையை வள்ளுவர் அறியார் என்று கருதுவதும் பெரும் பிழையாகும்.

‘நழுவிய’ என்பதைக் குறிப்பிட நேர்ந்தபொழுதெல்லாம், வள்ளுவர் அதனை இழிந்த என்ற சொல்வினைக் கொண்டே விளக்கி இருப்பதைக் கண்டு மகிழுங்கள். அது,

        தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
        நிலையின் இழிந்த கடை

என்பதாம்.

ஆகவே, இழந்த என்ற சொல்லிற்கு நழுவிய என்று பொருள் காணாமல் பறிகொடுத்த என்று பொருள் காண்பதே உண்மையானதாக இருக்கும்.



11. தினற்பொருட்டாற் கொல்லாது!

      தினற்பொருட்டாற் கொல்லாது உலகுனனின் யாரும்
      விலைப்பொருட்டால் ஊன்தருவா ரில்

என்பது ஒரு குறள். இதன் பொருள்—

தின்பது காரணமாக உலக மக்கள் கொல்லவில்லையானால் பொருள் காரணமாக ஊனை விற்பவர் எவரும் இல்லை என்பது பரிமேலழகரின் கருத்து. மகாவித்துவான்