இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
13
வெளிவந்திருக்கிறார். நாடக அவையை. நாடகக் கலையை, நாடகக் கலைஞர்களைச் செல்வமாகக் கருதியிருக்கிறார். வெறுஞ்செல்வமாக அல்ல; பெருஞ்செல்வமாகவே கருதியிருக்கின்றார் என்ற இதுவும், இது போன்ற பிறவும், இக்குறளால் அறிந்து மகிழலாம்.
குறளைப் படியுங்கள், விரும்பிப் படியுங்கள். மேற்போக்காக அல்ல; கருத்துான்றிப் படியுங்கள். எழுதுவதற்காக அல்ல, பேசுவதற்காக அல்ல, நடப்பதற்காக என்று படியுங்கள். அப்படிப் படித்தால் அது உங்கள் வாழ்வை வளமாக்கும்.
வாழட்டும் குறள் நெறி!