உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருக்குறள் புதைபொருள் 2.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2. நகச்சொல்லி நட்பாடல்

       "பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
        நட்பாடல் தேற்றா தவர்."

என்பது திருக்குறளில் ஒரு குறள். இது “புறங் கூறாமை” என்ற தலைப்பில் வந்த ஒன்று.

வெஃகாமையைப் பற்றிக் கூறியதன் பின்னும், பயனில் சொல்லாமையைப் பற்றிக் கூறுவதன் முன்னும், வள்ளுவர் புறங்கூறாமையைப் பற்றிக் கூறியிருப்பது பெரிதும் நயமுடையதாகும். பிறர் பொருளை அடைய ஆசைப்படுதல் புறங்கூறுதலில் வந்து முடியும் என்பதும், புறங்கூறுகின்ற ஒருவன் பயனற்ற சொற்களைச் சொல்ல நேரிட்டுவிடும் என்பதும், இவ்வதிகார வைப்புமுறையால் பெறப்படும்.

“புறங்கூறுவது தவறு, அது சுற்றத்தார்களைப் பிரித்து விடும். இனியவைகளைக் கூறி அவரை நட்புக் கொள்ள அறியாதவரே புறங்கூறுவர்” என்பது இதன் பொருள்.

பொய்கூறல், புறங்கூறல், கடுஞ்சொற்கூறல், பயனில கூறல் ஆகிய நான்கும் மக்கள் நாவினாற் செய்யும் தவறுகள். இதில் புறங்கூறுதல் பொய்யை அடுத்துநின்று, “துணைத் தலைமைப்பதவியை” வகித்து நிற்கிறது. புறங்