பக்கம்:திருக்குறள் புதைபொருள் 2.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

17

புறங்கூறும் மக்களின் நலன்களைக் கருதியும், இக்குறள் அறம் கூறும் தன்மையில் அமைந்திருப்பது வியக்கக்கூடியதாகும்.

ஒத்த பண்பும், பணியும், நட்பும் உடைய சுற்றத்தார் இருவருக்கிடையில், ஒருவன் சென்று புறங்கூறுவானாயின், அது அவர்களில் ஒருவரை ஒருவர் பகைக்கச் செய்து, அவர்களிருவரையும் பிரித்து வைத்துவிடும். ஆதலின் ‘கேளிர்ப் பிரிப்பர்’ என்பதை, “கேளிரிற் பிரிப்பர்” என்றும் கொள்ளலாம்போலத் தெரிகிறது.

வீரமற்றோர், ஈரமற்றோர், பொய்யர், வஞ்சகர், பொறாமை கொண்டோர் ஆகியவரே புறங்கூறித் திரிவர். ஆதலின், அத்தகைய மக்களை அவர்களது சுற்றத்தார் தங்களில் ஒருவராக ஏற்க அஞ்சி வெறுத்தொதுக்கிப் பிரித்துவிடுவர். இதனால் புறங்கூறு வோரைப் ‘கேளிரும் பிரிப்பர்’ எனவும் கொள்ள வேண்டியிருக்கிறது.

புறங்கூறுகின்ற ஒருவனை அவனது சுற்றத்தாரும் பிரித்துவிடுவர் என்பதிலிருந்து, புறங்கூறுவார்க்குத் துணையாவார் இவ்வுலகில் எவருமில்லை என இக்குறள் அறுதியிட்டுக் கூறுவதாகவும் தெரியவருகிறது.

உறவினர்களுடைய குற்றங்களைக் கூறுவதே இத்தகைய விளைவுகளை உண்டாக்கிவிடுமானால், பிறருடைய, அதிலும் பகைவர்களுடைய குற்றங்களைக் கூறுவது என்னென்ன விளைவுகளை உண்டாக்கும் என்பதையும், இக்குறள் நம்மைச் சிந்தித்துப் பார்க்கும் படி தூண்டிக்கொண்டிருக்கிறது.

உள்ள குறைகளைப்பற்றிக் கூறுவதனாலேயே புறங்கூறும் ஒருவனுக்கு இத்தகைய தீமைகள் விளையுமானால், இல்லாத குற்றங்களை ஒருவர்மீது ஏற்றிக்

தி.—2