5. சுற்றம் கெடும்
"கொடுப்ய தழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும்."
என்பது திருக்குறளில் ஒரு குறள். இது “அழுக்காறாமை” என்ற தலைப்பில் வந்த ஒன்று.
அழுக்காறு என்பது பொறாமை எனப்படும். அழுக்காறாமை என்பது பொறாமையின்மை என்றாகும். “பொறையுடைமை” பற்றிக் கூறிய பின்னும், “பிறர் பொருளை விரும்பாமை” பற்றிக் கூறுவதன் முன்னும், “பொறாமை கொள்ளாமை” பற்றிக் கூறியிருப்பது பெரிதும் நயமுடையதாகும்.
அழுக்கறுத்தல் உள்ளத்தை அழுக்குப்படுத்தல். அழுக்கறுப்பான் உள்ளத்தை அழுக்குப்படுத்திக் கொள்பவன். பொறாமை அதன் விளைவு; தடுப்பது அவனது செயல்.
உள்ளத்தை அழுக்குப்படுத்திக் கொண்டவன் நினைப்பது—கேடு. சொல்வது-பழிச்சொல். செய்வது-இழிவினை. ஆதலாலே, அது தீநெறி ஆகிறது.
"ஒருவன் பிறனுக்குக் கொடுப்பதைக் கண்டு பொறாமைப்பட்டு, அதனைத் தடுப்பது தவறு. அது அவனை