உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருக்குறள் புதைபொருள் 2.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

மையையே, இக்குறள் “கொன்றது போலும் நிரப்பு” என்று கூறிக்கொண்டிருக்கிறது.

இரப்போர்க்கு இல்லையென்னாது வழங்கிவந்த ஒரு பெருமகனுக்கு, உண்ண உணவு இல்லாத வருத்தம் தரும் துன்பத்தைவிட வழங்கப் பொருளில்லாது வருந்தும் துன்பம் மிகப்பெரியதாக விருக்குமாம். பிறருக்கு வழங்க முடியாமல் வருந்தும் நல்குரவை வள்ளுவர் “அறஞ் சாரா நல்குரவு” என அறிமுகப்படுத்துகிறார். அவனது சொல்லிலும் சோர்வு காணப்படுமாம். இவையனைத்தும் வள்ளுவர் கருத்துக்கள். இவற்றை எண்ணிப் பார்க்கும் பொழுது, “கொன்றது போலும் நிரப்பு” நம்மையும் கொன்றுவிடும்போலத் தோன்கிறது.

நல்ல வழியிற் பொருளைத்தேடி நல்லோர்க்கு வழங்கி வந்த ஒரு நன்மகன் வறுமையடைந்ததும், வருகிறவர்களுக்கு வழங்க முடியாமற் போயிற்று என்று எண்ணுந் துன்பம்; பிறரது துன்பத்தைப் போக்க முடியாது வாழ்கின்றன வாழ்வு என்ன வாழ்வு என்று எண்ணுந் துன்பம்; பலநாள் வழங்கிவந்த நான் இல்லை யென்று இப்பொழுது எப்படிக் கூறுவது என்று எண்ணுந்துன்பம்; நாம் வறுமைப்பட்டோம் என்பதை நல்லறிஞர்கள் அறிந்தால், நம்மிடம் வாராமற் போய் விடுவார்களே என்று வருந்துந் துன்பம்; ஆகிய அனைத்தையும் ‘கொன்றது போலும் நிரப்பு’ என்ற சொற்றொடர் தன்னுள் நிரப்பிக் காட்டிக்கொண்டுதானிருக்கிறது.

“மானம், குலம், கல்வி, வண்மை, அறிவுடைமை, தானம், தவம், முயற்சி, தாளாண்மை, சிற்றின்பம் ஆகிய பத்தும் பசி வந்திடப் பறந்து போம்” என ஒரு புலவர் கூறினார். வள்ளுவர் பதினோராவதாக உறக்கமும் பறந்து போய்விடும் என்று கூறுகிறார். விறகு எரிக்கும்