பக்கம்:திருக்குறள் புதைபொருள் 2.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

7. அல்லவை தேய

       "அல்லவை தேய அறம் பெருகும்
        நல்லவை நாடி இனிய சொலின்."

என்பது திருக்குறளில் ஒரு குறள். இது ‘இனியவை கூறல்’ என்ற தலைப்பில் வந்த ஒன்று.

இதற்கு முன்னே “விருந்து” ஓம்புதலைப் பற்றிக் கூறியிருப்பது பெரிதும் நயமுடையதாகக் காணப்பெறுகிறது.

“நல்லவைகளை நாடி இனிய சொற்களைச் சொன்னால் அல்லவை தேயும், அறம் பெருகும்” என்பது இதன் பொருள்.

தத்துவங்கள் 96 என்பர் அறிஞர், இக்குறள் திருக்குறளில் 9 வதாக அமைந்து, இன்சொல்லின் தத்துவங்களையெல்லாம் விளக்கிக்கொண்டிருக்கின்றது போலும்.

“இனியவை கூறல் விருந்தோம்புவார்க்கு வேண்டிய தொன்று” என்பது, பரிமேலழகர் கருத்து. விருந்தோம்பல் இயலாதார்க்குத்தான் இது முதலில் வேண்டியது என்பது பிறரது கருத்து.

ஆறு எழுத்துக்களால் ஆன மூன்று சொற்கள்தான் மனிதனின் ஆற்றலை வெளிப்படுத்துவன். அவை "எண்,