54
பதவி, வீடு, நிலம், வண்டி, வாகனம், பொன், பொருள் முதலியவைகளால் மேன்மையடைய முடியாது என இக்குறள் வெளிப்படையாகவே கூறிக் கொண்டிருக்கிறது. இதனால், பிற பலவற்றால் அடைய முடியாத உயர்வை ஒழுக்கம் ஒன்றினாலேயே அடையலாம் என்பதும் பெறப்படும்.
முதலில் ஒழுக்கத்தைப் பெற்று, அதன் மூலம் உயர் வடைந்துவிட்ட ஒருவர், பின்பு அறியாது ஒரு தவறு செய்துவிட்டாலும், அல்லது அவர் தவறு செய்துவிட்டதாக ஒருவர் முன்வந்து கூறினாலும் உலகம் நம்பாது. ஆதலின் ஒழுக்கத்தைப் பெற்றவர் எப்பொழுதும் அடைவது மேன்மையே என இக்குறள் கூறிக்கொண்டிருக்கிறது; இதனை ‘ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை’ என்பதால் நன்கறிலாம்.
மக்கட் பண்பு ஒழுக்கத்கை அடைவதே. அதனையடையாதவர் மக்களல்லர். “அவர் மரம்” என்பது வள்ளுவர் கருத்து. இதனை “மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்” என்ற மற்றொரு குறளாற் காட்டுகிறார். இவ் உவமையும் மக்களில் தாழ்ந்தோரைக் குறிப்பிடுவதில்லை. ஏனெனில், மரம் இருந்தும் உதவுகிறது; இறந்தும் உதவுகிறது.
இக்குறளின் மேற்பகுதிக்கும், கீழ்ப்பகுதிக்கும் இடையில் “இழுக்கம்” என்ற சொல் காணப்படுகிறது. “ஒழுக்கம்” என்பதன் நேர்மாறானதே “இழுக்கம்” என்றாகும். ஒழுக்கம் என்பது நல்லொழுக்கத்தை மட்டுங் குறிப்பதுபோல, இழுக்கம் என்பது தீயொழுக்கத்தை மட்டுமே குறிக்கும்.
“இழுக்கு” என்ற சொல் திக்குறளில் 18 இடங்களில் காணப்படுகிறது. அவற்றுள் தவறு என்ற பொருளில்