உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருக்குறள் புதைபொருள் 2.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

57

இறங்கி விடாதே! அதனால் நீ பழியையே அடைவாய். பின் நல்லது செய்யினும் பயனுமிராது, புகழும் வராது, பழியும் நீங்காது.

அந்த அளவில் நின்றுவிட நீ விரும்பினாலும், உலகம் உன்னை ஒருபோதும் விட்டுவிடாது. இறுதியில் ஏற்காத பழியையும் நீ ஏற்கவேண்டி வந்துவிடும்! என எச்சரிக்கை செய்து கொண்டிருக்கிறது இக்குறள், குறள் வேண்டுமா? படியுங்கள் மறுபடியும்.

       "ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
        எய்துவர் எய்தாப் பழி."

படித்தீர்களா? மறந்து விடாதீர்கள்! ஏனெனில் குறள் படிப்பதற்கோ, மறப்பதற்கோ தோன்றியதல்ல; அது நடப்பதற்காகவே தோன்றிய ஒன்று!

வாழட்டும் தமிழகம்!
வளரட்டும் தமிழ்ப் பண்பு!