பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைமாமணி, தமிழாகரர் பேராசிரியர் அண்ணாமலை நகர் டாக்டர். ஆறு. அழகப்பன், 9–3 – 88 எம்.ஏ., எம்.லிட்., பி.எச்.டி.,

தமிழ்த்துறைத் தலைவர்,

இந்திய மொழிப்புல முதன்மையர்.

முன்னுரை

‘முப்பாலுக்கு அப்பால் ஒரு நூல் இ ல்லை” என்று கூறும் அளவிற்கு அனைத்துப் பொருட்களையும் எஞ்சாது உரைத்த பெருமைக்குரியது திருக்குறள். அறம், பொருள், இன்பம் என இந் நூல் பகுத்துரைக்கும் பொருட்கள் இந்தியத் துணைக் கண்டத்தின் பல்வேறு மொழிபேசும் மக்களும் படித்துப் பயன்பெறத்தக்கவை யாதலால் தேசிய இலக்கியமாகக் கருதத்தகும் சிறப்புடையது.

இந்நூல் பயிற்சிமிக்க ஒருநூலாக விளங்குகிறது. இந் நூலுக்கு எழுந்த பழைய உரைகள் பத்தும் இக்கருத்தினை அரண் செய்யும். தருமர், மணக்குடவர், தாமத்தர், நச்சர், பரிமேலழகர், பருதி, திருமலையர், மல்லர், பரிப்பெருமாள், காளிங்கர் என்ற பதின்மரைத் திருக்குறளின் உரையாசிரியர்களாக ஒரு வெண்பா கூறுகின்றது. இவர்களேயன்றி வேறுசில உரையாசிரியர்களும் இருந்துள்ளனர். இக்காலத்தும் பலர் உரை எழுதி வருகின்றனர். குறட்பாவினை அப்படியே எடுத்தமைத்து வேறு இரண்டு அடிகளை விளக்கமாக அமைத்துச் செய்யப்பெற்ற நூல்களும் உண்டு. இவ் வகையில் எழுந்தனவாகப் பதினான்கு நூல்கள் காணப்படுகின்றன. இவையெல்லாம் ம க் க ளு க் குத் திருக்குறளின்பாலுள்ள ஈடு பாட்டினைப் புலப்படுத்துகின்றன.

திருக்குறள் உரையாசிரியர்களுள் பரிமேலழகர் காலத்தால் பிற்பட்டவரெனினும் அவர் உரையினையே பெரும்பான்மையினர் படித்து இன்புறுகின்றனர். அனைத்து உரைகளையும் ஒருசேர ஒப்பிட்டுப்பார்க்கும் நிலையில் மகாவித்துவான் ச. தண்டபாணி தேசிகர் அவர்கள் உரைவளப் பதிப்பினைக் கொண்டு வந்துள்ளார். கள். உரைவளத்தை அடியொற்றி உரைக் கொத்து” என்னும் பெயரில் திருப்பனந்தாள் ஆதினம் ஒருபதிப்பைக் கொண்டு