பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83

3. தவம்

(இ-ள்) தம்க்கு உற்றநோயைப் பொறுத்தலும் பிறவுயிர்க்கு

நோய்செய் யாமையுமாகிய அத்தன்மையே தவத்திற்குவடிவாவது. (எ-று.

மேற்கூறிய தவம் எத்தன்மைத் தென்றார்க்குக் கூறப்பட்டது.

265. தன்னுயிர் தானறப் பெற்றானை யேனைய

மன்னுயி ரெல்லாம் தொழும்.

(இ-ள்) தன்னுயிரானது தானென்று கருதுங் கருத்து அறப் பெற்றவனை, ஒழிந்தனவாகிய நிலைபெற்ற உயிர்களெல்லாம் தொழும், (எ-று).

தன் என்றது சலிப்பற்ற அறிவு; உயிரென்றது சீவனாகி நிற் கின்ற நிலைமையை, தானறுதலாவது அகங்கார மறுதல். மேற் கூறிய நெறியே யன்றி அகங்காரம் விடல் வேண்டும் என்பதுTஉம் அதனாற் பயனும் கூறப்பட்டது. 5

266. சுடச்சுடரும் பொன்போ லொளிவிடுந் துன்பஞ்

சுடச்சுட நோற்கிற் பவர்க்கு.

(இ-ள்) நெருப்பின்கண்ணே இட்ட இடத்துத் தன்னோடு கலந்த மாசற்று ஒளிவிடுகின்ற பொன்னைப்போலத், துன்பம் நலியத் தவஞ்செய்வார்க்குத் தம்மொடு மருவின வினை விட்டு ஒளி விடும், (எ-று) .

இது, வினைவிட் டொளி யுண்டாம் என்றது. 6

HT!

267. கூற்றங் குதித்தலுங் கைகூடு தோற்றலி

னாற்ற றலைப்பட்ட வர்க்கு.

(இ-ள்) கூற்றத்தைத் தப்புதலுங் கைகூடும்; தவத்தினாகிய வலியைக் கூடினார்க்கு, (எ-று).

உம்மையால் தப்புதலரிதென்பது முன்னேயமைந்து கிடந்த தாயினும் காலத்தேவருகின்ற கூற்றத்தினையும் தப்பலாமென்றது. இது, மார்க்கண்டேயன் தப்பினாற்போல வென்றது. 7