பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

4. கூடாவொழுக்கம்

(இ-ள்) தவத்திலே மறைந்து தவ மல்லாதவற்றைச் செய்

தல், வேட்டுவன் துாற்றிலே மறைந்து புள்ளைப் பிணித்தாற் போலும், (எ-று).

தவவேடம் கொண்டாற்றான்

கருதின பொருளெய்துமோ என்றார்க்கு, அவர்

ஐயப்படா ராதலின் எய்து மென்று அதற்குக் காரணம் காட்டிற்று. அர்ச்சுனன் (தவ மறைந்தல்லவை செய்தான்) 4

275. வானுயர் தோற்றமெவன் செய்யுந் தன்னெஞ்சந்

தானறி குற்றப் படி ன்.

(இ-ஸ்) வானளவும் உயர்ந்த பெருமையுண்டாயினும், அ.தி

யாதனைச் செய்யவற்று? தன்னெஞ் சறியக் குற்ற முண்டாயின், (எறு) .

தான்-அசை. இஃது, இக்கூடா ஒழுக்கத்தினைப் பிறரறிந்து இகழப்படானாயினும், அவன் செய்கின்ற தவத்தினாற் பயனுண் டாகாது எனறது. 5

276. வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்க

ளைந்து மகத்தே நகும்.

(இ-ள்) கள்ள மனத்தினை யுடையவனது குற்றத்தினை யுடைய ஒழுக்கத்தினைப் பிறரறியாராயினும், தன்னுடம்பி னுண் டான பூதங்களைந்தும் அதனுள்ளே நகா நிற்கும், (எ-று).

பூதமென்றது அவையிற்றின் காரியமான பொறி. பொறிகள றியவே அவற்றின் குறிப்பினானே பிறராலறியப்படும், இது பிற ரறியா தொழியினும் தானேயறிவிக்கு மென்றது. 6

277. நெஞ்சிற் றுறவார் துறந்தார் போல் வஞ்சித்து

வ ழ்வ. ரின் வன்கண்ண ரில். (இ-ள்) நெஞ்சிற் றுறவாராய்த் துறந்தாரைப் போல வஞ் சனை செய்து வாழுமவர்களைப்போலக் கொடியா ரில்லை யுலகத்து, (எ-று).

இது, கொடிய ரென்றது.

2.

7

‘வன்கண்ணா என்பது மணக். பாடம்