பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96

8. இன்னா செய்யாமை

இன்னாசெய்யாமையாவது தமக்கு இன்னாதவற்றைப் பிறர்க் குச் செய்யாமை. இது வெகுட்சி பிறந்துழி நிகழ்வதொன்றாகலின் அதன்பிற் கூறப்பட்டது.

311. இன்னா வெனத்தா முணர்ந்தவை துன்னாமை

வேண்டும் பிறன்கட் செயல்.

(இ-ள்) தாம் இன்னாதவென்று அறிந்தவற்றைப் பிறர்க்குச் செய்தலை மேவாமை வேண்டும்.

இஃது, இன்னா செய்யாமை வேண்டுமென்றது. 1

312. கறுத்தின்னா செய்தவற் கண்ணு மறுத்தின்னா

செய்யாமை மாசற்றார் கோள்.

(இ-ள்) தாஞ்செய்த குற்றத்தினாலே வெகுண்டு, இன்னாத வற்றை தமக்குச் செய்தவன் மாட்டும், தாம் அதற்கு மாறாகப் பின்பு இன்னாதவற்றைச் செய்யாமை குறற மற்றார்கோட்பாடு, (எ-று).

மேற் பொதுவாக இன்னாசெய்யற்க என்றார்; இது காரண முண்டாக இன்னாசெய்தவற்கு மாறாக இன்னாசெய்தலைத் தவிர வேண்டும் என்றது. 2

313. செய்யாமற் செற்றாற்கு மின்னாத செய்தபி

னுய்யா விழுமத் தரும்.

(இ-ள்) த .ெ ன ரு குற்றஞ் செய்யாதிருக்கத் தனக்கு இன்னாத செய்தவற்கும், இன்னாத செய்யினும் அஃது உய்வில்லாத நோயை தரும், (எ-று).

இது காரணமின்றி இன்னாத செய்தவர்க்கும் இன்னாத செய்தலைத் தவிர வேண்டுமென்றது. ஆ

1+

1. லுணர்ந்தவை’ என்பது மணக் பாடம்

2. செய்யாமை செற்றாற்கு’ என்பது மணக் பாடம்