பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102

10. நிலையாமை

நிலையாமையாவது மயக்கத்தினால் தானென்றும் தனதென்று நினைத்திருக்கின்ற யாக்கையும் பொருளும் நிலையாமை கூறுதல். மேல் காமவெகுளி கூறினார், இது மயக்க மின்மையாதலான் அவற் றின் பிற் கூறப்பட்டது.

331. நில்லா தவற்றை நிலையின வென்றுணரும்

புல்லறி வாண்மை கடை.

(இள்) நில்லாத பொருள்களை நிற்கின்றதாக நினைக்கினற

எனவே, பொருள்களை யுள்ளவாறு காணவொட்டாத மயக் கத்தைக் கடிய வேண்டுமென்றவாறாயிற்று. 1

832. அற்கா வியல் பிற்றுச் செல்வ மது பெற்றா

லற்குப வாங்கே செயல்.

(இ-ள்) நில்லாத வியல்பினை யுடைத்துச் செல்வம்; அதனைப் பெற்றால், அப்பொழுது நிற்குமதாகிய அறத்தைச் செய்க, நில்லா தன மூவகைப்படும்; செல்வ நிலையாமை. இளமை நிலையாமை, யாக்கை நிலையாமை என. அவற்றுளிது செல்வ நிலையாதென்ப து உம் அது பெற்றாலறஞ் செய்ய வேண்டும் என்பது உங் கூறிற்று.

333. கூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்

போக்கு மதுவிளிந் தற்று.

(இ-ள்) கூத்தாட்டுக் காண்டற்கு அவை திரண்டா லொக்கும் பெருஞ்செல்வத் திரளுமாறு; அவையெழுந்து போனாற் போலும் அது போமாறும், (எ-று) .

மேற் செல்வ நிலையா தென்றார் அது நிலையாதாயின் அறஞ் செய்யுமா றென்னை யென்றார்க்குக் கூத்தாட்டின்கட் பன் மக்களெல்லாம் தாமே வந்து திரண்டு அது முடிந்தால் தாம் வேண்டிய நெறியேபோவர்; அதுபோலப் புண்ணிய முள்ளளவும் நின்று அஃதற்றாற் போமென்று கூறிற்று. இவையிரண்டும் செல்வ நிலையாமை கூறிற்றின. 3