பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

103

10. நிலையாமை

334. நாளென வொன்றுபோற் காட்டி யுயிரீரும்

வாள துணர்வார்ப் பெறின்.

(இ-ள்) நாளென இன்பந் தருவ தொன்று போலத் தோற்றி

உயிரை யீர்வதொரு வாளாம்; அதனை யறிவாரைப் பெறின், (டி - ) . .

உயிரீரும் என்றமையான் இளமை நிலையாமை கூறிற்று. 4

335. நாச்செற்று விக்குண்மேல் வாராமு னல்வினை

மேற்சென்று செய்யப் படும்.

(இ-ள்) நாவழங்காமற் செறுத்து விக்குளானது மீதுார்ந்து வருவதன் முன்னே, நல்வினையை மேல் விழுந்து செய்யவேண்டும். (எ-று) .

மேல் இளமை நிலையாதென்றார். இஃது இளமை கழிவதன் முன்னே நல்வினை செய்யவேண்டுமென்றது. இவையிரண்டும் இளமை நிலையாமை கூறிற்றின. 5

336. நெருந லுனனொருவ னின்றில்லை யென்னும்

பெருமை யுடைத்திவ் வுலகு.

(இ-ள்) ஒருவன் நேற்றுளனாயிருந்தான், இன்றில்லை யாயினா னென்று சொல்லும் பெருமையை இவ்வுலகம் உடைத்து, (எ-று)

இது யாக்கை நிலையாமை கூறிற்று. 6

337. ஒருபொழுதும் வாழ்வ தறியார் கருதுப

கோடிய மல்ல பல

(இ-ள்) ஒரு பொழுதளவும் தம்முயிர் நிலைநிற்கும் என்ப தனை யறியார்களாயிருந்தும், தமது வாழ்நாள் கோடியுமல்ல, பல வாக்கிக் கருதுவர் உலகத்தார், (எ-று).

மேல் ஒரு நாளுளனானவன் பிற்றை ஞான்று செத்தானென் றார், இஃது ஒரு பொழுதளவும் உயிர் நிலையாகாது என்றாம். 7