பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

10. நிலையாமை

338. குடம்பை தனித் தொழியப் புட்பறந் தற்றே

யுடம்போ டுயிருடை நட்பு.

(இ-ள்) கூடு தனியே கிடக்கப் புள்ளுப் பறந்து போனாற் போலும்; உடம்போடு உயிருக்கு உள்ள நட்பு, (எ-று).

மேல் ஒரு பொழுதென்று காலங்கூறினார். இது நினைத்த பொழுது போமென்றது. == 8

339. உறங்கு வதுபோலுஞ் சாக்கா டுறங்கி

விழிப்பது போலும் பிறப்பு.

(இ-ள்) உறக்கத்தோடு ஒக்கும் சாக்காடு; உறங்கி விழித்த தனோடு ஒக்கும் பிறப்பு, (எ-று).

இது போன உயிர் மீண்டும் பிறக்கு மென்பதுாஉம், பிறந் தாலும் உறங்கலும் விழித்தலும் போல மாறி வருமென்பது உம் கூறிற்று. 9

340. புக்கி லமைந்தின்று கொல்லோ வுடம்பினுட்

டுச்சி லிருந்த வுயிர்க்கு.

(இ-ள்) தனதல்லாத உடம்பினுள்ளே ஒதுக்கடையாக விருந்த உயிர்க்குப் போயிருத்தற்கிடம் அமைந்ததில்லையோ? அமைந்த தாயின், இதனுள் இராது. (எ-று) .

புக்கில் என்பது முத்தித்தானம். இது மேற்கூறியவாற்றான் மாறிப் பிறந்து வரினும் ஓரிடத்தே தவிருமென்பது கூறிற்று,

வானப்பிரத்தமாகிய துறவற முடிந்தது. 10

க___ _