பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110

12. மெய்யுணர்கல் 358. கற்றிண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்

மற்றீண்டு வாரா நெறி.

(இ-ள்) இவ்விடத்தே மெய்ப்பொருளை பறிந்துதெளிந் தாரே அடைவார்; மீண்டு இவ்விடத்து வாராத வழியினை (எ-று) கல்வி-அறிவு: கல்லாக்கடுவன்'* என்றாற்போல-காட்சி-தெளிவு: உள்பொருளிதுவெனவுணர்தல் ஞானமாம், தெள்ளிதின் அப் பொருள் தெளிதல் காட்சியாம்ர் என்று பிறரும் சொன்னா ரா.கலின் இது பிறப்பறு மென்றது. - - - - 8

359. சார்புணர்ந்து சார்பு கெடவொழுகின் மற்றழித்துச்

சார்தரா சார்தரு நோய்.

(இ-ள்) தன்னைச் சார்வனவற்றையறிந்து அவை (யிற்றின்) சார்தல்கெட ஒழுகுவனாயின், அவ்வொழுக்கத்தினையழித்துச் சார் தலைச் செய்யா; சாரக்கடவ துன்பங்கள், (எ-று)

சார்பு-வினை; சார்புகெடஒழுகல்-காமம் வெகுளி மயக்கமின்றி மெய்யுணர்ச்சியானொழுகுதல். அழித்துச் சார்தரா சார்தரு நோயென்றது முற்பிறப்புப் பலவாகலின், அதனின் உண்டான வினைப் பயனெல்லாம் ஒருங்கு துய்த்தானல்லன்: ஒரு நல் வினைப் பயத்தினானே அறிவுண்டாய் அதனானே உண்மை கண்டான் அவன் காட்சியைத் தப்பாமல் நிற்பனாயின், சாரக்கடவதாய் நிற்கின்ற வினை சாராதே விட்டுப்போமென்றது. o

360. காமம் வெகுளி மயக்க மிவை மூன்றி

னாமங் கெடக்கெடு நோய். (இ-ள்) ஆசை வெகுளி மயக்கமென்னும் மூன்றினது நாமம்

போக, வினைபோம், (எ-று)

இது சார்புகெட ஒழுகுந்திறன் கூறிற்று. வினை கெடுதற்கு வழி இதுவென்று கூறுதலான். இது மெய்யுணர்தலாயிற்று. .10

o: :ெசிெகாக்கு-நந்தினை 22 t சிந்தாமணி-முத்தி-2851