பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

111

13. அவாவறுத்தல்

அவாவறுத்தலாவது பொருள் மேற் செல்லும் ஆசையைத் தவிர்தல், முத்திக்குக்காரணம் மெய்யுணர்தலே யமையுமாயினும், . ம்போடு நிற்றலின் தான் விடப்பட்ட பொருள்கள்மாட்டு ஆசை செல்லின், மீண்டும் பிறப்பிற்குக் காரணமாம்; ஆதலான். இதனைத் தவிர வேண்டுமென்று எல்லாவற்றினும் பின் கூறப்பட்டது.

361. அஞ்சுவ தோரு மறனே யொருவனை

வஞ்சிப்ப தோரு மவா.

(இ-ள்) ஒருவனை வஞ்சனை செய்வது ஆசை, ஆதலால், அதனை அஞ்சுவதே அறம் ஆவது (எ- று)

வஞ்சனை செய்தல்-நன்றி செய்வாரைப் போல முன்னே நின்று, பின்னே தீக்கதியுள் உய்த்தல். இஃது அவாவின்மை வேண்டுமென்றது. 1.

362. அவாவில்லார்க் கில்லாகுத் துன்பமஃ துண்டேற்

றவாஅது மேன்மேல் வரும்.

(இ-ள்) ஆசையில்லாதார்க்குத் து ன் ப ம் இல்லையாகும்; அஃது உண்டாயின், துன்பமானது கெடாது மேலே மேலே வரும்,

(எ-று)

அவாவுண்டானால்

வரும்குற்ற மென்னை யென்றார்க்குக் கூறப்பட்டது.

2

363. அவரவென்ப வெல்லா வுயிர்க்குமெஞ், ஞான்றுத்

தவா அப் பிறப்பினும் வித்து.

(இ-ள்) எல்லாவுயிர்க்கும் எல்லா நாளுங் கேடில்லாத பிறப் பைக் கொடுக்கும் விதையாவது ஆசையென்று சொல்லுவர். (எ-று)

இஃது ஆசை துன்பம் தருதலேயன்றிப் பிறப்பினையும் தருமென்றது. 3.

364, அற்றவ ரென்பா ரவாவற்றார் 19ற்றையச

ரற்றாக வற்ற திலர்.