பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன்மையும் தீமையும் தமதுடன்பாடின்றி வரும். அதனையியல் .ெ . ) கொள்ளாது நன்மையை நன்றெனக் கொண்டிருந்தவர் தீமை பைத் தென்றிராது.அதனைப் போக்குதற்காக அல்லற்பட்டு முயல்வது s i )க்கு என்றவாறாயிற்று.

இதனை அறிந்தவர்கள் வருவனவெல்லாம் இயல்பென்று

கொள்ள வேண்டுமென்றது. 1()

அறத்துப்பால் முற்றிற்று.

பொருட்பால் (70)

பொருட்பாலாவது பொருளின் பகுதி என்று கொள்ளப்படும். பொருள் என்றது மக்களை யுடைத்தாகிய நிலம்; பகுதியாவது அந் திலத்தை ஆளுதற்குரிய அாசனது தன்மையும், அவர் ஆளுதற்குச் செய்யும் திறன்களும், அதற்குத் துணையான அமாத்தியர் இலக்கணமும், அவர் செய்யும் திறன்களும், அவ்விருவரானும் உண்டாக்கப்படும் நாடும் அரணும் பொருளும் படையும் ஆகியவற்றினது திறன்களும் அறம் பொருள் இன்பம் என்னும் மூன்றற்கும் துணையாகிய நட்பினது திறன் களும், அவ்வாறுண்டாகிய பொருட்கும் பொருளுடையார்க்கும் கேடு வரும் திறன்களும், அந்நிலத்து உண்டான மக்களது இயல்பும், அவர் ... “ பொருள் செய்யுமாறும் கூறுதல். இவையெல்லாம் அரசியலும் அமைச் சியலும் பொருளியலும் நட்பியலும் துன்பவியலும் குடியியலும் என அடங்கும். துன்பவியல் என்றது எற்றுக்கு? அதனையும் நட்பியலுன் அடக்கினார் உளராலெனின் அவையெல்லாம் நட்கப்படாது என்னும் கருத்தினால் கூறினார்களாயினும், அவற்றினிடைக் கிடந்த பேதைமை புல்லறிவாண்மை என்னும் அதிகாரங்கள் நட்கப்படாததும் நட்கப் படுவதுமன்றி ஒருவற்குத் துன்பத்திற்குக் காரணமாம் என்று கூறுதலால் துன்பவியல் என வேண்டும் என்க.

இதனுள் இறைமாட்சி முதலாக இடுக்கண மியாமை fறாகக்

கூறிய அதிகாரம் இருபத்தைந்தும் பெரும்பான்மையும் அரசர்க்கு உரித்தாதலின் அரசியலென்றும், அமைச்சு முதலாக அவையஞ்சாலை