பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

119

1. இறைமாட்சி

ஈண்டுக்குடி என்றது குடியுள்ள நாடு. இஃது அரசனுக்கு

கலே எண் டுவன கூறிற்து. 1

882. அஞ்சாமை பீகை யறிஆக்க மீந்தான்கு

மெஞ்சாமை வேந்தற் கியல்பு.

(இ-ள்) அஞ்சா மையும் ஈகையும் அறிவுடைமையும் ஊக்க முடைமையுமென்னும் இத்தான்கு குணமும் ஒழியாமை வேந்தனுக் கியல்பு, எ-று)

இவை நான்கும் இயற்கையாக வேண்டுமென்றது. ?

383. தாங்காமை கல்வி துணிவுடைமை யிம்மூன்று

நீங்கா நிலனசன் பவற்கு.

(இ-ள்) மடியின்மையும் கல்வியுடைமையும் ஒரு பொருளை ஆராய்ந்து துணிதலுடைமையும் என்று சொல்லப்பட்ட இம்மூன்றும் நிலனாள்வார்தமக்கு நீங்காமல் வேண்டும் (எ-று)

இது முதலாகச் செயற்கைக் குணம் கூறுகின்றார். உலகத் துக் குற்றமும் குணமும் ஆராயுங்கால் மயங்கக்கானாது உண்மை ஆராய்ந்து துணிதல் ஒருதலையாக நிலனாள்பவர்க்கு வேண்டும் என்பதனானும், அதுதான் கல்வியானல்லது ஆராய்தல் அரிதாக லானும், அக்கல்வி மடியின்மையானல்லது வாராது ஆதலானும், சிறப்பு நோக்கி முற்பட இம்முறையே கூறினார். 3

384, அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா

மான முடைய தரக.

(இ-ள்) அறத்தினான் தப்பாமலொழுகி, அறனல்லாத காம வெகுளிமயக்க மென்னுமிவை கடிந்து மறத்திற் றப்பாத மானத்

தினையுமுடையவன் அரசனாவான். (எ-று)

மானமும் கடிய வேண்டுதலின் மறத்திற்றப்பாத மானம் வுேண்டுமென்றார். இஃது ஒழுக்கமும் நிலைமையும் வேண்டு மென்றது. 4