பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

131

1 . இறைமாட்சி

இன் சொலா லித்தளிக்க வல்லாற்குத் தன்சொலாத் ாைன் கண்ட கடனைத்திவ் வுலகு.

(இ-ஸ்) இனிய சொல்லோடே கொடுத்துத் தலையளி செய்யவல்ல வனுக்குத் தன்னே வலாலே இவ்வுலகம் தான் கண்டாத்

போ லத் தன் வசத்தே கிடக்கும், (எ-து)

தலையளியாவது வரிசை கொடுத்தல். அவ்வரிசை பெற்றவர் அச லுக்கு நல்லர் ஆதலானே. தாம் இருந்த இடம் எல்லாம் அரசன் இருந்தானாகக் கொண்டு இராசகாரியத்தைத் தப்பாமல் செய்வராத “ ல் தான் கண்டாலொக்கும் என்றது. இஃது அமாத்தியர்க்கு அ சன் செய்யும் திறன் கூறிற்று.

389 முறைசெய்து காப்பாற்று மன்னவன் மக்கட்

கிறையென்று வைக்கப் படும்.

(இ-ள்) குற்றஞ் செய்தாரை அதற்குச் செய்யும் முறைமை கப்பாமற் செய்து, எல்லாவுயிரையுங் காத்தல் செய்கின்ற அரசன், மக்களுக்கு நாயகனென்று எண்ணப்படும். (எ-று)

390. செவிகைப் பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்

கவிகைக்கீழ்த் தங்கு மூலகு.

(இ-ள்) தன் செவி வெறுக்கும்படியாகப் பிறர் செய்த குற்றங் களைக் கேட்டுவைத்தும், அதனைப் பொறுக்கவல்ல குணமுடைய வேந்தனது குடை க்கீழே கிடக்கும் உலகு, (எ-று)

வேறு ஒரு நிழல் தேடாது என்றாயிற்று. இஃது அமாத்தியர் குற்றம் செய்தார் என்று பலரும் சொல்லுங்கால் பலவாற்றானும் பொறுக்க வேண்டும் என்றது. அன்றியும் மந்திரி புரோகிதர் அவனிடத்துச் சொல்லுஞ் சொற்களைப் பொறுக்க வேண்டும் என் பாருமுளர். 19