பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122

2. கல்வி

கல்வியாவது கல்வியாமாறும் அதனானாகிய பயனுங் கூறுதல். இது முதலாகப் பொருள் வரவு இயற்றுந் திறங் கூறுகின் றாசர்தலின், அஃதியற்றுங்கால் கல்வி முந்துறவேண்டும் என்று இது முன் கூறப்பட்டது.

891. கற்க கசடறக் கற்பவை கற்றபி

னிற்க வதற்குத் தக.

(இ-ள்) கற்கப்படுவனவற்றைக் குற்றமறக் கற்க கற்ற பின்பு அக்கல்விக்குத் தக வொழுக, (எ-று).

கல்வி பலவகைத்து அவை எல்லாவற்றுள்ளும் கற்கப்படுவன வற்றைக் கற்று அக்கல்வியிற் கூறினது தப்பாமற் செய்க. அது கல்வியாற் பயன் என்றவாறாயிற்று. இது கற்கவும் வேண்டும்; அதனைக் கடைபிடிக்கவும் வேண்டுமென்றது. 1

392. எண்ணென்ப வேனை யெழுத்தென்ப விவ்விரண்டுங்

கண்ணென்ப வாழு முயிர்க்கு.

(இ- ள்) எண்ணென்று சொல்லப்படுவனவும் ஒழிந்த எழுத் இதன்று சொல்லப்படுவனவுமாகிய இவ்விரண்டு பொருளும் ஒர் உலகின்கண் வாழுமுயிர்களுக்குக் கண்ணென்று சொல்லுவர் அறிவார், (எ-று).

மேல் பொதுப்படக் கூறிய கல்வி பலவற்றுள்ளும் இவை கிரண்டும் சிறப்புடைத்து என்று கூறிற்று. உயிர் என்றது மக்களை, இை வ அ றிவா ர் மக்கள் ஆதலின். 2

893. கண்ணுடைய ரென்பவர் கற்றோர் முகத்திரண்டு

1) ண்ணுடையர் கல்லா தவர்.

(இ-ள் கண்ணுடைய ரென்று சொல்லப்படுவோர் கற்றோர்; கல்லாதார் முகத்திலே இரண்டு புண்ணுடைய ரென்று சொல்லம் படுவர், (எ-று).