பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

131

5. அறிவுடமை

யாவர் சிலர் நட்டாராயினும் பகைவராயினும் இது கேட்ட. வாற்றாற் றெள்ளியரா ய் ஆராய்ந்து துணித லறி வென்றது. 4.

425. எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்

துண்பொருள் காண்ப தறிவு.

(இ- ள்) அறிதற்கரிய பொருளவாகிய சொற்களை எளிய பொருளாம்படி பிறரியையச் சொல்லிப் பிறர் சொல்லுஞ் சொற்களின்

நுண்ணியதாய பொருளை அவர் சொல்லுமாற்றானே காண்பது

அறிவாவது, (எ-று) .

இது சொற்பொருள் காண்ட லறிவென்றது.

426. சென்ற விடத் தாற் செலவிடா தீதொரீஇ

நன்றின்யா லுய்ப்ப தறிவு.

(இ-ள்) உள்ள ஞ்

சென்ற விடத்தே உடம்பையுஞ் செல்ல விடாது,

தீமையை நீக்கி, நன்மைப்பகுதியிலே செலுத்துவது அறி வாதுை. (எ- று) .

இது காமநுகர்ச்சியின்கண் பழியும் பாவமும் பொருட்கேடும் வாரா மற் செலுத்துவது அறிவென்றது. 6

427. அஞ்சுவ தஞ்சாமை பேதைமை யஞ்சுவ

தஞ்ச லறிவார் தொழில்.

(இ-ள்) அஞசத் தகுவதனை அஞ்சாதொழிதல் ஒருவற்கு அறிவின்மையாவது: அஞ்சத்தகுவதனை அஞ்சுதல் அறிவார் தொழில் ஆவது, (எ-து).

மேல் அஞ்சாமை வேண்டு மென்றாராயினும், ஈண்டு அஞ்ச வேண்டுவனவற்றிற்கு அஞ்த சுல் அறிவென்றார். 7

428. அறிவுடையா ராவ தறிவா ரறிவிலா

ர..தறி கல்லா தவர்.

(இ-ள்) அறிவுடையாராவார் பிற்பயக்கு மது அறிவார்; அறி

வில்லாதா ராவார் அதனை யறியாதவர், (எ- று) .