பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132

5. அறிவுடைமை

இது மேற்சொல்லிச் சொல்லாதன வெல்லசம் தொகுத்துக் கூறிற்று இத்துணையும் அறிவிலக்கணம் கூறப்பட்டது. 8

429. அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கு

முள்ள பழிக்க லாகா வரண்.

(இ-ள்) ஒருவனுக்கு குற்றங்காக்குங் கருவியாவது அறிவு: பகைவரால் உட்புகுந்து அழிக்கலாகா அரணும் அதுதானே. (எ- று)

இது தனக்குள்ள குற்றத்தை மறைக்கு மென்றும், பிறரால் வருந்தீமையைக் காக்குமென்றும், அறிவாற் பயன் கூறிற்று. 9

430. எதிர தாக் காக்கு மறிவினார்க் கில்லை

ய திர வருவதோர் நோய்,

(இ-ள்) துன்பம் வருவதற்கு முன்னே வருமென்று நினைத் துக் காக்கும் அறிவையுடையார்க்கு நடுங்கவருவதொரு துன்பமும் இல்லை, (எ-று).

முன் னை வினையால் வருந் துன்பமும் முற்பட்டுக் காக்கின், கடிதாக வாராதென்றது. 10

ாகங்ா-_து

6. குற்றங் கடிதல்

குற்றங்கடிதலாவது காமக் குரோத லோப மதமானம் உவகை என்னும் ஆறு குற்றங் கடிந்து ஒழுகுதல், (இஃது அறிவுடையா ராயினும் குற்றங் கடிதல்) வேண்டுமென்று அதன் பின் கூறப்பட்டது

431. குற்றமே காக்க பொருளாகக் குற்றமே

யற்றந் தரூஉம் பகை.

(இ-ள்} தமக்குப் பொருளாகக் குற்றம் வாரா மற்காக்க; அக் குற்றந்தானே இறுதியைத் தரும் பகையும் ஆதலான், (எ- று) .

இது குற்றங்கடிய வேண்டுமென்றது. 1.