பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதியது தீது பழையது நன்றென்றல் பூமியுள்ளோர் விதியது வேபொருளென்னன்மின் நல்லோர் விழுப்பமுண்டே புதியது நன்று பழையது தன்னினும் பூமடந்தை பதியதின் மேவில் பருமுத்தொ டாடையைப் பார்மின்களே.

கண்ணும் முகமும் கருங்குழலும் செவ்வாயும் வண்ண முலையும் வனப்புடைத் தென்-றெண்ணிக் கருத்தறியார் சாரலுறுங் காளையர்நேர் முப்பால் கருத்தறியா துட்குறள்காண் பார்.

நல்வினை செய்வார் நாடோறும் வந்திக்க நான்முகர்ை தொல்லுரை யைத்தென் தமிழா லறியத் துககடபுசீர் இல்லற முந்துற வும்பொருட் பக்கமும் இன்பமு மாம் பல்வகை யாவரு ளுந்திரு வள்ளுவன் பாதங்களே.

*- --


உலகத்து மக்கட்கு உறுதிபயத்தல் காரணமாகப் பல்வகைப் பட்ட சமைய நூல்கள் எல்லாவற்றுள்ளும் துணிந்துாை அறம் , பொருள். இன்பம், வீடு எனப்பட்ட பொருள் நான்கினும் சுருங்கின முகத்துணர்த்துவான் எடுத்துக்கொண்டார் அவற்றுள் வீடாவது அறஞ் செய்தாரது பயன் ஆ த லி ன் அவ்வீடுபேற்றை அறத் தினுளடக்கி அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால்’ என்று மூன்று பகுதியாகக் கூறினர் என்று கொள்ளப்படும். அவற்றுள் அறமானது அறம் முதலான பொருள் நான்கினையும் பயத்தலின் முற்படக் கூறினர். பொருளானது வீடொழிந்த ெய | ரு ள் மூன்றினையும் பயத்தலின் அ த"ன் பி ன் கூறினர். இன்பமாவது பெரும்பான்மையும் இன்பம் ஒன்றினையும் பயத்தலின் அதன்பின் கூறிஞர் என்று கொள்ளப்படும்.

இனி அறமாவது தானம், தவம், விாதம், பூசை யென நால் வகைப்படும். தானமும் பூசையும் இல்வாழ்வாரறஞ் செய்யப்படு தலானும், தவமும் விசதமும் துறந்தாரறஞ் செய்யப்படுதலானும். அவை இல்லறம் துறவறம் என இரண்டு பகுதியாக்கி அறத்துப் பால் கூறப்பட்டது. அதனுட் கடவுள் வாழ்த்தும் வான் சிறப்பும்