பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

141

இது மறுமைக்குத் துணையாமென்றது. 8

459 மனநல நன்குடைய ராயினுஞ் சான்றோர்க்

கினநல மே மாப் புடைத்து. (இ-ஸ்) மன நன்மை மிகவுமுடையவராயினும், இன நன்மை யுடைமை சான்றோர்க்குக் காவலாதலையுடைத்து, (எ-று).

இஃது இனம் நன்றல்லா வாயின் பிறரா லிகழப்படுவராதலான், இனநலம் இகழ்ச்சி வாராமற் காக்குமென்றது. 9

480. மனநல மன்னுயிர்க் காக்க மினநல

மெல்லாப் புகழுந் தரும். (இ-ள்) மனநன்மை நிலைபெற்ற உயிர்க்கு ஆக்கமாம்; அது போல, இன நன்மை எல்லாவற்றானும் வரும் புகழினைத் தரும், (எ-று).

இஃது எல்லாப் புகழுந் தருமென்றது. 10

9. தெரிந்து செயல்வகை

தெரிந்து செயல் வகையாவது வினை செய்யுங்கால் அதனை எண்ணிச் செய்யவேண்டுமென்பது கூறுதல். அறிவுடையவனாய்க் குற்றங் கடித்து, மந்திரி புரோகிதரைத் துணையாகக் கொண்டு சிற் றினஞ் சேரா தொழுகும் அரசனும் வினை செய்யுங்காலத்து முன்பே எண்ணிச் செய்யவேண்டுதலின், அவையிற்றின் பின் கூறப்பட்டது.

461. தெரிந்த வினத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்

கரும்பொருள் யாதொன்று மில். (இ- ள்) அமாத்தியர் பலருள்ளும் ஆராய்ந்து கூட்டிக்கொள் ளப்பட்ட மந்திரிகளாகிய இனத்தோடே கூடச் செய்யும் வினையை ஆராய்ந்து, அதனைச் செய்யுமாறு எண்ணிச் செய்ய வல்லவனுக் குப் பெறுதற்கு அரியதொரு பொருளுமில்லை, (எ-று).