பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீத்தார் பெருமையும் அறன் வலியுறுத்தலும் ஒரோரதிகாரமாகவும், இல் வாழ்க்கை முதலாகப் புகழ் ஈருக இல்லறம் இருபததிகாரமும், அருளுடைமை முதலாக அவாவறுத்தலிருகத் துறவறம் பதின் மூன்றதிகாரமும், ஊழ் ஒரதிகாரமும் ஆக முற்பட முப்பத்தெட்டதி

க பங்கள் கூறப்பட்டன.

புருஷார்த்தமாகிய தன்மார்த்த காம மோக்கங்களுள் முதன்

மூன்றனையும் வழுவாதொழுகவே மோக்கமெய்துதலான் அதற்கு

வேறு வகுத்துக்கூற வேண்டுவதின்மையின் அஃது ஒழித்து ஒழிந்த

தர் மார்த்த காமப் பகுதிகளை அறத்துப்பால் பொருட்பால் காமத்துப் பால் என்றும் பேர் கூறுவார் மங்கல வகையான் எப்பொருட்கு முதலாகிய கடவுள் வாழ்த்தும் அக்கடவுளினது செய்கைத்தாகி இவ்வுலகின்றியமையாதாகிய வான்சிறப்பும், பிறப்பினிற் சிறப்

பெய்துதற்குரியாாகிய மு னி வ ர து பெருமையும் அவரால் கொண்டுய்க்கப்படுகிற அறத்தினது வலியும் நான்கதிகாரத்தாற் பாரித்துப் பிரமசரியம் காருகத்தம் வானப் பிரத்தம் சந்நியாசம் என்னும் நால் வகைப் பட்ட அறத்தினும் பிரமசரியன் சீடராய் நின்றாேதுவதன்றிச் செய்வது பிறி தின்மையின் அதனைப் புதல் வரைப்பெறுதலென்புழியடக்கிக் காருகத்தம் இருபததிகாரத்தானும் வானப்பிரத்தம் பத்ததிகாரத் தானும் சந்நியாசம் மூன்றதிகாரத் தானும், எல்லார்க்கும் பொதுவாகி. ஊழ் ஒரதிகாரத்தானுமாக முப்பத்து நான்கதிகாரத்தின் அறத்துப்பால் கூறிப் பொருட்பால்

அரசன் முதலாக நாட்டி அவற்றுக்குப் புறத்துறுப்பான படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என ஆருகப் பகுத்து அரசற்குரிய திறம் இருபத்தைந்ததிகாரத்தானும், அமைச்சரதியல்பு பத்ததிகாரத் தானும், நாடும் அரணும் பொருளும் ஒரோரதிகாரத்தானும், படை

யிரண்டதிகாரத்தானும் நட்பு ஐந்ததிகாரத்தானும், பகை ஆற.கி காரத்தானும், அரசர்க் கங்கமான பெ ரியாரைப் பிழையாமை முதல் மருந்திருக ஆறும் ஆறதிகாரத் தானும் அதற்குறுப்பாகிய

குடிமை முதல் நாணுடைமை எனப்படுவன வேழும் ஏழதிகாரத் தானும் அரசர்க்கும் ஏனை வருணங்கட்கும் ஒப்ப உரித்தாகிய குடி செயல் வகையும், அவருட் பார்ப்பாரொழித்துப் பெரும்பான்மை வேளாளர்க் குளித்தாகி ஏனையோர்க்குச் சிறுபான்மை யுரித்தாகிய

உழவும் ஒரோரதிகாரத்தானும், அவ்வாறு பொருள் செய்யாத வழி உளதாகு நல்குரவும் அது பற்றித் தோன்றும் இரவும் இரவின்கனுக தாகிய அச்சமும் இரப்பார்க்கியாதாருள்ளிட்ட கயவரதொழுக்கமும்