பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

143

9. தெரிந்து செயல்வகை

4. 5. ஆக்கங் கருதி முதலிழக்குஞ் செய்வினை

யூக்கா ரறிவுடையார்

(இ-ஸ்) தமக்கு ஆக்கம் உண்டாகவேண்டி, முன்புண்டான முதலும் இழக்கவரும் வினையைச் செய்யார் அறிவுடையார், (எ-று)

மேல் பிற்பயக்கவேண்டும் வினை செய்ய வேண்டும் என்றார்; இது பிற்பய வாதவினை செய்யலாகாதென்றது. 5

|து பற த தனறது

466. எள்ளாத வெண்ணிச் செயல்வேண்டுந் தம்மொடு

கொள்ளாத கொள்ளா துலகு.

(இ-கள்) முடியுமாயினும், பிறராலிகழப்படாதவற்றை எண் ணிைச் செய்தல் வேண்டும்; தமக்குத் தகாத செய்தியை யுலகத்தார் கொள்ளாராதலான், (எ-று).

இது பிறராலிகழப்படாதன செய்யவேண்டும் மென்றது. 6

467 நன்றாற்ற லுள்ளுந் தவறுண் டவர வர்

பண்பறிந் தாற்றாக் கடை.

(இ-ள்) நன்மை செய்யுமிடத்தினும் குற்றம் வரும்;

அவ ரவர் குணமறிந்து செய்யாத விடத்து, (எ-று).

இதுவுமோரெண்ணம் கூறிற்று. 7

468. செய்தக்க வல்ல செயக்கெடுஞ் செய்தக்க

செய்யாமை யானுங் கெடும்.

(இ-ள்) செய்யத்தகாதனவற்றைச் செய்ததனாலும் கெடும், செய்யத் தகுவனவற்றைச் செய்யாமையாலும் கெடும், (எ-று).

இது மேற்கூறாதனவெல்லாம் தொகுத்துக் கூறிற்று. 8

469. ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று

போற்றினும் பொத்துப் படும்.

(இ-ள்) மேற்கூறிய நெறியினாலே முயலாத பொருள், பலர் நின்று காப்பினும் குற்றப்படும், (எ-று).

எண்ணிச் செய்யாதது தப்பு மென்றது 9