பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144

9. தெரிந்து செயல்வகை

470. வகையறச் சூழா தெழுதல் பகைவரைப்

பாத்திப் படுப்பதோ ராறு.

(இ-ள்) மேற்சொன்னவகை எல்லாம் போக்கறச் சூழாதே போர் கருதி யெழுதல், பகைவராகிய விதையை விளை நிலத்தின் கண்ணே இடுவதொரு நெறி, (எ- று).

இது பகைவர்க்கு ஆக்க முண்டாமென்றது. 10

10. வலியறிதல்

வலியறிதலாவது தனக்குள்ள வலியும் பிறர்க்குள்ள வலியும் அறிதல். செய்யத்தக்க வினையை யெண்ணினாலும் அதனைச் செய்து முடிக்குங்கால் வலியறிந்து செய்யவேண்டுதலின், அதன்பின்

கூறப்பட்டது.

471. வினை வலியுந் தன்வலியு மாற்றான் வலியுந்

துணைவலியுந் தூக்கிச் செயல்.

(இ-ள்) செய்யும் வினையினது வலியும், தனக்குண்டான வலி யும், பகைவனது வலியும், தனக்கும் பகைவர்க்கும் துணையாயி னார் வலியும் எண்ணிப் பின்பு வினை செய்க. (எ-று)

இது வலியறியும் இடம் கூறிற்று. 1

472. உடைத்தும் வலியறியா ருக்கத்தி னுரக்கி

யிடைக்கண் முரிந்தார் பலர்.

(இ-ள்) தம்முடைய வலியறியாது மனமிகுதியாலே வினை செய்யத் தொடங்கி, அது முடிவதன் முன்னே கெட்டார் பலர்,

இது வலியறியாதார் கெடுவரென்றது. 2