பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146

10. வலியறித்தல்

47.7. ஆற்றி னளவறிந் தீக வது பொருள்

போற்றி வழங்கு நெறி.

(இ=ள்) வருவாய் அளவறிந்து கொடுக்க; பொருளுண்டாக் கும் * நெறி அது வாதலான், (எ-று).

இனிப்பொருளினது வலியறிதல் கூறுகின்றாராதலின் இதற் குத் தக்க செலவுசெய்ய வேண்டுமென்று கூறிற்று. 7

478. அளவறிந்து வாழாதான் வாழ்க்கை யுனபோல

வில்லாகித் தோன்றாக் கெடும்.

(இ~ள்) தன் வருவாய் அளவறிந்து வாழாதான் வாழ்க்கை கள் உளபோலத் தோன்றி, அதன்பின் இல்லையாகித் தோன்றாது கெடும். (எ-று).

தோன்றாக்கெடும் என்பது பின்பும் ஆக்கம் இன்றிப்போகு மென்றது. இது மேற்கூறியவாறு செய்ய சதார் கெடுவரென்றது. 8

479, ஆகா றளவிட்டி தாயினுங் கே டி ல்லை

யோகா றகலாக் கடை

(இ- ள்) பொருள் வரும் வழியளவு சிறிதாயினும் கேடில்லை யாம்; அது போம்வழி போகாதாயின், (எ-று)

இது முதலுக்குச் செலவு குறையவேண்டுமென்றது. 9

480. உளவரை தரக்காத வெரப்புர வாளன்

வளவரை வல்லைக் கெடும்.

(இ-ள்) தன் அளவை, நினையாதே ஒப்பரவு செய்வானது செல்வத்தினளவு விரையக்கெடும், (எ-று)

மேல் முதலிற் செலவு குறையவேண்டு மென்றார், அ ஷ்வாறு செய்யின் ஒப்புரவு செய்யுமாறு என்னை யென்றார்க்குக் கூறப் பட்டது. ஒப்புரவாண்மையென்று ஒப்புரவிற்கே போக்குவாருமுளர் 10

  • உண்டாக்கி வழங்கும் என்பர் மணக்குடவர்