பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

147

11. காலமறிதல்

காலமறிதலாவது வினைசெய்தற்கு ஆங்காலமறிதல், வலி யறிந்தாலும் வினைசெய்யுங் காலம் அறிந்து செய்யவேண்டுதலின், அதன்பின் கூறப்பட்டது.

4.81. பகல்வெல்லுங் கூகையைக் காக்கை யிகல்வெல்லும்

வேந்தர்க்கு வேண்டும் பொழுது.

(இ-ள்) இராப்பொழுது வெல்லுங் கூகையைக் காக்கை பகற்பொழுது .ெ வ ல் லு ம்; ஆதலான், மாறு பாட்டை வெல்லும் அரசற்க்குக் காலம் வேண்டும்.

இது காலமறிதல் வேண்டுமென்றது. 1

482. காலங் கருதி யிருப்பர் கலங்காது

ஞாலங் கருது பவர்

(இ-ள்) வினை செய்யுங்காலம் வருமளவும் நினைத்து அசை வின்றி யிருப்பர்; ஞாலத்தைக் கொள்ளக் கருதுபவர், (எ-று)

இது காலம் வரவு பார்த்திருக்குங்கால் பின்பு செய்யும் வினை புலப்படாமல் இருக்க வேண்டும் என்றது. 2

483. ஊக்க முடையா னொடுக்கம் பெ கருதகர்

தாக்கற்குப் பேருந் தகைத்து.

(இ-ள்) மன மிகுதி யுடையவன் காலவரவு பார்த்து ஒடுங் குதல், போரைக் கருதின தகர்வலி பெறத்தாக்குதற் பொருட்டுப்

பெயர்ந்தாற்போலும், (எ-று).

இது காலம் வருமளவும் பொறுத்தால்வலி மிகு மென்றது. 3

484. பொள்ளென வாங்கே புறம்வேரார் காலம்பார்த்

துள்வேர்ப்ப ரொள்ளி யவர்.

1 : ‘துள்வொப்பர்’ என்பது மணக். பாடம்