பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

149

11. காலமறிதல்

488. பருவத்தோ டொட்ட வொழுக றிருவினைத்

திராமை யார்க்குங் கயிறு.

(இ-ள்) காலத்தொடு பொருந்த ஒழுகுதல், செல்வத்தை நீங் காமல் கட்டுவதொரு கயிறாம், (எ-று)

இனிக் காலமறிந்ததனால் (வரும்) பயன் கூறுவார் முற்படச் செல்வம் கெடா தென்றார். 8

489. அருவினை யென்ய வுளவோ கருவியாற்

கால மறிந்து செயின்.

(இ-ள்) அருவினையென்று சொல்லப்படுவனவும் உளவோ? முடிக்கலாங் கருவியோடே கூடக் காலத்தை யறிற்து செய்ய வல்ல ராயின், (எ-று).

இது முடியாத வினையில்லை என்றது. 9

490. ஞாலங் கருதினுங் கைகூடுங் காலங்

கருதி யிடத்தாற் செயின்.

(இ-ள்) உலகமெல்லாம் பெறுதற்கு நினைந்தானாயினும் பெறலாம்; காலத்தைக் குறித்து இடனறிந்து செய்வனாயின், (எ-று)

இஃது எல்லாப் பொருளு மெய்துமென்றது. இனி இடனறி தல் கூறுகின்றாராதலின் அது இடன் பிற்கூறப்பட்டது 10